ஞாயிறு, 14 ஜூலை, 2013

மலாலா விருது : இந்திய பெண்கள் உட்பட ஏழு பேர் தேர்வு

ஐ.நா.,: பெண் சுதந்திரம் ,பெண் கல்விக்காக போராடும் இளம் பெண்களை ஊக்கு விக்கும் ‌வகையி்ல் இந்தாண்டு முதல் வழங்கப்பட உள்ள ஐ.நா., மாலாலா இளைஞர் விருதுக்கு இந்திய பெணகள் உட்பட உலகம் முழுவதும் இருந்து ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாலாலா விருது: பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மாலாலா. இவர் பெண் குழந்தையின் கல்விக்காக பிரசாரம் செய்து வந்தார். இதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயம‌டைந்து உயிர் பிழைத்த அவருக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்தது. இதனையடுத்து அவரது பிறந்த நாளான கடந்த 12-ம் தேதி ஐ.நா.,சபையில் பேச அனுமதிக்கப்பட்டார். இந்நிகழ்‌ச்சியில் ஐ.நா., செயலாளர் பான்.கி-மூன் மற்றும் உறுப்பு நாடுகளின் அங்கத்தினர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இளைய தலைமுறையினர் பங்கு கொண்டனர்.
‌தொடர்ந்து பேசிய மாலாலா தனது உரையில் தீவீரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை காந்தி, அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து கற்றுகொண்டதாக கூறினார். இந்திய பெண் குழந்தைகள் தேர்வு: உ.பி., மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள நங்லகும்பா கிராமத்தை சேர்ந்தவர் பெர்மான் இவரது மகள் ரஷியாசுல்தான்(15). சிறுவயது முதல் கால்பந்து தயாரி்க்கும் ‌தொழிலை செய்துவந்தார்.
பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம மூலம் கல்வி கற்க துவங்கினார். அதனை தொடர்ந்து தனது முயற்சியால் ‌48 குழந்தை தொழிலாளர்களை கல்வி கற்க உதவி செய்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்காக நேபாளம் உட்பட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான பிரசாரத்தை நடத்தியுள்ளார்.
பெங்களூர் பெண் தேர்வு:


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவி அஸ்வினி (21) பெண் குழந்தைகளி்ன் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது லி‌யோனார்டு செசையர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு உதவி செய்துவருகிறார்.
உலக பெண் குழந்தைகள் தேர்வு :


அ‌தே‌‌போல் நேபாளத்தை சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் சிறு வயதில் குழந்தைதொழிலாளியாக தந்தை மூலம் விற்கப்பட்டார். இவர் 12 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி பெண்கல்விக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வங்க தேசத்தை சேர்ந்த கேசாப் (18). இவர் பெண் குழந்தையின் திருமணத்திற்கு எதிராக போராடியதற்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மலாலா மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவருக்கு அருகில் இருந்த அவரது நண்பி ஷஷியாவும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர்களை அடுத்து ‌மொராக்கோ நாட்டை சேர்ந்த ரவுயா, சியாராலியோனே நாட்டை சேர்‌நத அமினாடா, ஆகியோரும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: