ஜாதி வெறியர்கள் இந்தப்
படத்தில் காட்டுவது போன்று கொடூரமான முகத்தோடு இல்லை. அவர்கள் பார்ப்பதற்கு
சாதுவாக நன்கு படித்த டாக்டர்களாக இருக்கிறார்கள். கண்ணில் ஞானஒளி தெரிகிற சங்கராச்சாரியார்களாக இருக்கிறார்கள்.
கெட்டவர்கள் என்றால் அவர்கள் வேட்டி,
லுங்கி கட்டிக் கொண்டு கறுப்பாக இருப்பார்கள் என்பது கால காலமாக நம்
பொதுப்புத்தியில் ஊறிப்போன சிந்தனை. ‘சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல
மாட்டான்’ ‘அழகா இருக்கிறவன் அறிவாளியா இருப்பான்’ என்பதுபோல், ஆதிக்க
ஜாதிக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், பணக்காரர்கள் பண்பாளராக
இருப்பார்கள் என்பதும்.
ஜெயேந்திரன் கொலை செய்த பிறகும், பல
பணக்காரர்கள் தன் மனைவியை தந்தூரி அடிப்பில் வேகவைத்து கொன்ற பிறகும்கூட
ஊடகங்கள் ஆதிக்க ஜாதிக்காரர்களை, பணக்காரர்களை கொடூரத்தின் குறியீடாக
கார்ட்டூன் வரைவதில்லை. ஜோக்கும் வெளியிடுவிதில்லை.
பஸ்சில் பொது இடங்களில் திருடுபவர்
டிப்டாப்பாக உடையணிந்து இருந்தால், லுங்கி கட்டி இருப்பவரை
சந்தேகப்படுவதும், அவர்தான் திருடினார் என்று அடிப்பதைப்போலதான் ஊடகங்கள்
நடந்து கொள்கின்றன.
எளிய மக்களின் பண்பாடு, உடை, உருவம்
அநீதிகளின் குறியீடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதுவேதான் தலித்
மக்களுக்கு எதிரான குறியீடுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
எளிய மனிதர்களைப் பற்றிய இந்தப் பார்வை
ஜாதிய வர்க்க கண்ணோட்டம் கொண்டது. இதை பலர் திட்டமிட்டு செய்யவதில்லை.
திட்டமிட்டு ஆதரிப்பதும் இல்லை.
ஏனென்றால் அது அவர்களின் இயல்பாகவே இருக்கிறது. அதனாலேயே அது அவர்களுக்கு தவறாகவும் தெரிவதில்லை mathimaran.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக