தமிழகத்தில், சில வாரங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தாங்கள் அங்கம்
வகிக்கும் போலீஸ் துறையில், லஞ்சம் வாங்கி குவிக்கும் இன்ஸ்பெக்டர்களை குறி
வைத்து, வேட்டை நடத்தி வருகின்றனர். இது, போலீஸ் அதிகாரிகள் மத்தியில்
பீதியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக போலீசில், லஞ்ச புகார்களின்
எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லஞ்சம் வாங்குபவர்களை,
கையும் களவுமாக பிடிப்பதற்கு, போலீசில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு
வருகிறது. இந்த துறையில் உள்ளவர்கள், பிற அரசுத்துறை அதிகாரிகளை வேட்டை ஆடி
வந்த நிலையில், தற்போது, தங்களின் துறையிலேயே வேட்டையை துவக்கி, லஞ்ச பேர்
வழிகளை கைது செய்து வருகின்றனர்.
46 உயர் மட்ட அரசியல் வாதிகள் ஆளும் கட்சிக்குள், கிரிமினல் வழக்குகளில்
சிக்கியும் உல்லாசமாக வாழும்போது, தற்சமயம் ஆளும் கட்சி அளவிற்கு மீறிய,
அதிக சலுகைகள் நம் போலீஸ் துறைக்கு வரி வழங்குவது இப்பொழுதாவது மக்களே
உங்களுக்கு புரிகிறதா? போலிசை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடுவது அவர்களுக்கு
பச்சை கோடி காட்டி பொய் வழக்குகள் போட செய்து மக்களை திசை திருப்புவது
எல்லாம் அந்த ஆளும் கட்சி 46 அரசியல் வாதிகள்தான் காரணம். அந்த 46
கிரிமினல் குற்ற பின்னணி உள்ள அரசியல் வாதிகளை காபந்து செய்ய போலிசின் தயவு
வேண்டும். அதனால் போலீஸ் என்ன செய்தாலும் யாரும் கேட்க்க நாதி இல்லை.
இதுதான் ஆளும் கட்சிக்கு நாம் வோட்டுகளை வாரி வாரி வழங்கிய
முட்டாள்தனத்திற்கு சிறந்த பரிசு
இதில், மண்டல வாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி, காக்கிச்சட்டைகளை கைது செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டு போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜதுரை, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கைது செய்யப்பட்டார்.இந்த கைது நடவடிக்கை முடிவுக்கு வருவதற்குள், மத்திய மண்டலத்தில், திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., தங்கதுரையின் வலையில் சிக்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, செங்கல்சூளை அதிபரிடம், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். இவர்களை போல், தமிழகம் முழுவதும், ஐந்து எஸ்.ஐ.,க்கள், மூன்று எஸ்.எஸ்.ஐ.,க்களை, லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.கரன்சியை கறக்கும் காக்கிச்சட்டைகள், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் பார்வையில் இருந்தும், அவர்களின் வலையில் சிக்காமலும் இருக்க, புதிய யுக்தியை கடை பிடிக்க துவங்கி உள்ளனர். இதில், ஸ்டேஷன், சரகம், மாவட்டம், மண்டல வாரியாக இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், ஏ.டி.எஸ்.பி.,க்கள் பலர், தங்களின் வசூல் வேட்டைக்காக, காக்கிச் சட்டையில் தன்னுடன் பணி புரியும், ஒருவரை ஏஜன்டாக நியமித்து அவர் மூலம் கரன்சியை கறந்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரிகளின், இந்த தந்திரமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து, தற்போது உயர் அதிகாரிகளின் ஏஜன்டுகளாக செயல்படுபவர்களின் பட்டியல் தயார் செய்து, அவர்களையும் வலையில் சிக்க வைக்க தேவையான நடவடிக்கைகளை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின், கழுகு கண் பார்வை, அவர்கள் அங்கம் வகிக்கும் போலீஸ் துறையின் மீது விழுந்துள்ளதால், லஞ்சம் வாங்கி குவிக்கும், எஸ்.ஐ., முதல் உயர் அதிகாரிகள் வரை பலரும் பீதி அடைந்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:போலீஸ் துறை என்றில்லாமல், அனைத்து துறைகளிலும் லஞ்ச பேர் வழிகளை கைது செய்து வருகிறோம். சமீப காலமாக, நாங்கள் அங்கம் வகிக்கும், போலீஸ் துறையில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை, எங்களுக்கு ஒரு வகையில் பெருமையை பெற்றுத் தருகிறது.இந்த நடவடிக்கை தொடரும். மண்டல, மாவட்ட வாரியாக லஞ்சம் பெறும் காக்கிச்சட்டைகள் குறித்த பட்டியல் தயார் ஆகி வருகிறது. அவர்கள் மீது, பொதுமக்களிடம் இருந்து புகார் வரும் பட்சத்தில், புகாரின் உண்மை நிலையை தெரிந்த பின்னர், அதில் உண்மை இருப்பின், நடவடிக்கை மேற்கொள்வோம்.தென் மண்டலம், மத்திய மண்டலத்தில் எங்களின் வேட்டையில் பலர் சிக்கி உள்ளனர். தொடர்ந்து சென்னை, மேற்கு, வடக்கு மண்டலத்திலும், விரைவில் லஞ்ச போலீசார் மீது நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.
dinamalar.com
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக