அங்கு அனாதையாக நின்ற ஸ்கூட்டி ஒன்றில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான எஸ்ஐ கலைவாணி பெயரில் ஆர்சி புத்தகம் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமார் தலைமையில் மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. கலைவாணியின் செல்போனை மீண்டும் ஆய்வு செய்த போது, திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை செய்த வெங்கடேசன் என்பவர் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.>இதுகுறித்து போலீசில் வெங்கடேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: வழக்கு ஒன்றுக்காக மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையம் சென்ற போது எஸ்ஐ கலைவாணியுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. என்னுடன் தனிமையில் நெருக்கமாக இருக்கவே கலைவாணி விரும்பினார். இது எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று அவரை வேலூரில் இருந்து வாலாஜாவுக்கு அழைத்து சென்றேன். திடீரென கலைவாணியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டேன். அவர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். சற்று நேரம் கழித்து அதே வழியாக திரும்பி வந்தேன். அப்போது, அவர் உயிருக்கு போராடினார். சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த நண்பரும் மாநகர பஸ் டிரைவருமான சுப்பன் (42) என்பவரை உதவிக்கு அழைத்தேன். அவரும் நானும் சடலத்தை, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் பாலாற்றின் ஓரத்தில் குழி தோண்டி சடலத்தை புதைத்தோம்.இவ்வாறு வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதையடுத்து வெங்கடேசனையும் சுப்பனையும் போலீசார் கைது செய்தனர். கொலையை மறைக்க வெங்கடேசனிடம் கார் டிரைவராக இருந்த ஒருவர் எல்லா உதவிகளையும் செய்துள்ளார். மேலும், இந்த கொலை பற்றி அப்போது எஸ்ஐயாக இருந்த ஒருவருக்கு தெரிந்துள்ளது. ஆனால், கொலை பற்றி தகவல் வெளியிடாமல் இருக்கவும், தொடர்ந்து தேடுதல் வேட்டையை நிறுத்தி வைக்கவும் பல லட்சம் ரூபாயை அவருக்கு வெங்கடேசன் கொடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த எஸ்ஐ தற்போது பதவி உயர்வு பெற்று ஆவடி எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட கலைவாணி உடல் தோண்டி எடுக்கப்பட்டு இன்று உடல் பிரேத பரிசோதனை நடைபெற
உள்ளது.
சீருடைக்கு பூஜை
கொலை செய்யப்பட்ட எஸ்ஐயின் போலீஸ் சீருடை, பெல்ட், தொப்பி, ஸ்டார் போன்றவற்றை வெங்கடேசன் ஆந்திராவுக்கு எடுத்து சென்று அங்கு தங்கி இருந்த வீட்டில் வைத்துள்ளார். அதை தினமும் வைத்து பூஜை செய்துள்ளார். சீருடைக்கு பூஜை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்துள்ளது. கலைவாணியை கொலை செய்தது எப்படி, அதை மறைத்தது எப்படி என்று வெங்கடேசன் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக