வியாழன், 18 ஜூலை, 2013

நள்ளிரவில் 8ம் வகுப்பு மாணவி பலாத்காரம் பணம் வாங்கி கொண்டு கதவை பூட்டி காவல் காத்த அம்மா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதிருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் 8ம் வகுப்பு மாணவி நள்ளிரவில் பலாத்காரம் பணம் வாங்கி கொண்டு கதவை பூட்டி காவல் காத்த கல்நெஞ்சு அம்மா கைது
தஞ்சை:திருமணத்துக்கு மறுத்த 8 வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை பூட்டி காவல் காத்த கொடூர அம்மாவும் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி (43). தஞ்சை ரெட்டிபாளையத்தில் வசிக்கிறார். கணவர் இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிளஸ் 2 படிக்கிறார். அம்மாவின் நடவடிக்கை பிடிக்காததால், அருகில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அம்மாவுடன் தங்கியுள்ள 2&வது மகள் அஞ்சலி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரை சேர்ந்த டெய்லர் லட்சுமணன் (27), கோமதிக்கு உறவினர். அஞ்சலியை திருமணம் செய்து கொடுப்பதாக லட்சுமணனிடம் கோமதி கூறியுள்ளார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வாங்கியுள்ளார். அம்மாவின் திட்டத்துக்கு அஞ்சலி ஒப்புக்கொள்ளவில்லை. ‘எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். நான் நிறைய படிக்கணும்’ என அடம் பிடித்தார். ஆனால் கோமதியோ, ‘இதற்குமேல் உன்னை என்னால் படிக்க வைக்க முடியாது. ஒழுங்காக திருமணம் செய்து கொள்’ என கட்டாயப்படுத்தி வந்தார்.


‘மகளை திருமணம் செய்து தருவதாக கூறித்தானே பணம் வாங்கினாய். சொன்னபடி அஞ்சலியை எனக்கு திருமணம் செய்து வை’ என கோமதியை லட்சுமணன் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 7&ம் தேதி திருச்செந்தூரில் ஒரு கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மைனர் பெண்ணுக்கு திருமணம் நடப்பதை அறிந்து போலீசார் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் தஞ்சை திரும்பியுள்ளனர்.

தனது திட்டம் நிறைவேறாததால் வெறுப்படைந்த கோமதி, லட்சுமணனுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினார். ‘நள்ளிரவில் வீட்டுக்கு வா. என் மகளை பலாத்காரம் செய்துவிடு. பிறகு வேறு வழியின்றி அவள் உன்னை கல்யாணம் செய்துகொள்வாள்’ என ஆலோசனை கூறினார். அதற்கு லட்சுமணனும் ஒப்புக் கொண்டார்.இந்நிலையில், கடந்த 9&ம் தேதி இரவு கோமதியும் அஞ்சலியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வந்த லட்சுமணன், கதவை தட்டினார். அவரை வீட்டுக்குள் அனுப்பிய கோமதி, கதவை வெளிப்பக்கமாக தாழிட்டு கொண்டு வெளியே காவலுக்கு இருந்துள்ளார். வீட்டுக்குள் சென்ற லட்சுமணன், தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலியை எழுப்பினார். கத்திமுனையில் மிரட்டி அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
மறுநாள் காலை இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார் அஞ்சலி. விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும். மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கருதிய உறவினர்கள், ஒரு வாரமாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தயக்கத்தில் இருந்தனர். ஆனால், தவறு செய்தவர்களை தண்டித்தே தீரவேண்டும் என சிலர் உறுதியுடன் கூறியதால், உறவினர்கள் உதவியுடன் சைல்டு லைனுக்கு அஞ்சலியையே தகவல் கூற வைத்தனர்.

சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதை தொடர்ந்து, சைல்டு லைன் ஏற்பாட்டின் பேரில், உறவினர்களுடன் வந்து தஞ்சை எஸ்.பி. தர்மராஜை சந்தித்து, புகார் கொடுத்தார் அஞ்சலி. எஸ்.பி. உத்தரவின்பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிந்து விசாரித்தார். மாணவியை பலாத்காரம் செய்த லட்சுமணனையும் அவருக்கு உடந்தையாக இருந்த கோமதியையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பணம் வாங்கிக் கொண்டு பெற்ற மகளை பலாத்காரம் செய்ய வைத்த அம்மாவின் செயல், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: