புதன், 17 ஜூலை, 2013

அமெரிக்காவில் இந்திய பாதிரியார் Leo Koppala பாலியல் குற்ற வழக்கு

An Indian Catholic priest, who was accused of sexually assaulting a girl in the US, would remain behind bars
after an appearance in the court Monday afternoon in which he was advised of his rights. Father Leo Koppala, 47, is charged with second degree criminal sexual conduct after an alleged fondling incident involving a 12-year-old girl in the basement of one of his parishioners. Bond has been set at US$ 75,000 for Fr. Koppala, who who belongs to Nellore diocese in Andhra Pradesh. Fr. Koppala has been serving at Saints Peter  Paul Catholic Church in Blue Earth for nearly four years.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 13 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக இந்தியாவை சேர்ந்த பாதிரியார் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாதிரியார் லியோ கொப்பலா(47), அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் ப்ளூ எர்த் பகுதியில் உள்ள தேவாலயத்தில் சேவை செய்து வந்தார். அதோடு, ஆந்திராவில் உள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு நிதி திரட்டும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார். தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் ஒரு குடும்பத்தினர், லியோவை தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், கடந்த மாதம் 7ம் தேதி, அவர்கள் வீட்டுக்கு சென்றார் லியோ. அனைவரிடமும் அன்பாக பேசிக் கொண்டிருந்த லியோ, அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதன்பின் அவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து அந்த சிறுமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாதிரியார் லியோவை போலீசார் கைது செய்து பாரிபால்ட் பகுதியில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லியோ ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
குற்றச்சாட்டு நிருபனமானால், லியோவுக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: