செவ்வாய், 16 ஜூலை, 2013

தனுஷ் : சிவகார்த்திகேயனுக்கு ஈசியா என்னோட இடத்தை குடுத்திர மாட்டேன் !


தற்போது தயாராகும் படங்களில், ‘ஓடக்கூடிய படம்’ என்று
கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடும் படங்களில் ஒன்றான, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சத்யம் தியேட்டரில் நடந்தபோது, சுவாரசியமான காட்சிகளுக்கு பஞ்சமில்லை. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் பட ஆடியோ ரிலீஸூக்கு, தனுஷ் வந்திருந்தார். தனது தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்த தனுஷ், வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அத்துடன் விழாவில் சத்யராஜ், விமல், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபு சாலமன், செந்தில்குமார், பாண்டிராஜ், மியூசிக் டைரக்டர் டி.இமான், தயாரிப்பாளர் எஸ்.மதன் உட்பட பல திரையுலக பிரபல முகங்கள் தென்பட்டன. விழாவில் தனுஷ் பேசியது சுவாரசியம். “இந்தப் படத்தோட தயாரிப்பாளர் பேசும்போது என்னை ‘ஹிந்தி நடிகரே..’ என்று அழைத்தார். யுகபாரதி ‘கவிஞரே’ என்று சொன்னார். சிவகார்த்திகேயன் பேசும்போது ‘நீங்க எதுவுமே பண்ணாம ஊர்ல வெட்டியா இருக்கிற ஹீரோ ரோல்களை பண்ணிக்கிட்டிருக்கீங்க, இப்போ நான் அதை பண்ணிக்கிட்டிருக்கேன்’னு சொன்னாரு…
ஸோ அதுக்குள்ள என்னை பேக்கப் பண்ண ரெடி பண்ணிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
இது எல்லாத்துக்கும் முன்னாடி நான் ஒரு தமிழன் நடிகர், ஹிந்திப்படம்கிறது உடம்பு மாதிரி அதுல கலர்கலரா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கலாம். தமிழ்ப்படம்கிறது மூச்சு மாதிரி மூச்சு நின்னா இதயம் நின்னு போயிடும், உடம்பு அழுகிடும், வேஸ்ட்டாயிடும். இங்கேருந்து அவ்ளோ ஈஸியா என்னை தொறத்திடாதீங்க.., சிவவுக்கு அவ்ளோ ஈஸியா என்னோட இடத்தை குடுக்க மாட்டேன், இந்த இடத்துக்கு வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சி நீங்க இந்த இடத்தை எடுத்துக்கங்க, இப்போ எனக்கு இந்த இடம் வேணும்” என்றார் தனுஷ்.
“சிவகார்த்திகேயன் பி.ஈ படிச்சிருக்கிற விஷயம் எனக்கு இப்போ தான் தெரியும், நான் ப்ளஸ் ஒன் பெயில், அவர் இவளோ படிச்சிருக்காருன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா ச்சீ..ன்னு அவர்கூட சேர்ந்திருக்கவே மாட்டேன்” என்று தனுஷ் சொல்ல ஒரே சிரிப்பு.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வசூல் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உயர்த்திவிட, ‘லேசான சந்தேகத்தில்’ இருந்த ‘எதிர் நீச்சல்’ வந்து மார்க்கெட்டை மீண்டும் தூக்கிவிட, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு ரெட் கார்ப்பெட் கிடைத்திருக்கிறது.
ஹிட் படங்களாக கொடுத்துவரும் டைரக்டர் ராஜேஷிடம் பணிபுரிந்த ராம்.ஜே வ.வா.ச.வில் இயக்குனராக அறிமுகமாகிறார். ராஜேஷ் தமது முன்னாள் அசிஸ்டென்ட்டுக்காக இப்படத்திற்கு வசனங்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இப்படமும் முழுநீள நகைச்சுவை படம்தான்.

கருத்துகள் இல்லை: