வெள்ளி, 19 ஜூலை, 2013

சுதாகரன் திருமணத்திற்கு செலவு செய்த பணம் யாருடையது?

பெங்களூர் : சுதாகரன் திருமணம் உட்பட எந்த தேவைக்கும் அ.தி.மு.க.
கட்சியை சேர்ந்தவர்கள் பணம் செலவு செய்யவில்லை. ஜெயலலிதாதான் செலவு செய்துள்ளார்  என்று தனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டர் சண்முகத்திடம் அரசு வக்கீல் பாவனி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ‘‘வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன் திருமணத்திற்கான செலவை பெண் வீட்டார் ஏற்று கொண்டதாக கூறி இருப்பது, வீட்டில் பறிமுதல் செய்த பரிசு பொருட்கள் கட்சி தொண்டர்கள் கொடுத்ததாக கூறியிருப் பது, இது தொடர்பாக வருமான வரித்துறை யிடம் ஆவணம் கொடுத்தது அனைத்தும் தவறான தகவல்கள்.
சுதாகரன் திருமணம் உள்பட அனைத்து செலவுகளும் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சொந்த பணத்தில் செய்ததுதான். வழக்கில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கிறீர்கள்’’ என்றார்.


அரசு வக்கீலின் இந்த குற்றச்சாட்டை ஆடிட்டர் சண்முகம் மறுத்தார். ‘‘நாங்கள் வருமான வரித்துறையில் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் நியாயமானது. அதில் தவறான தகவல் எதுவும் கிடையாது’’ என்றார். அதை தொடர்ந்து விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார் dinakaran.

கருத்துகள் இல்லை: