புதன், 17 ஜூலை, 2013

போலி நீதிமன்றம் போலி நீதிபதி ! அந்த நீதிமன்றமே போலியாக இருந்தால் !!!

கோவை ஒக்கிலியர் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(71). இவர் கோவை
ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
எனக்கு சொந்தமாக 9 சென்ட் நிலத்தை ஆர்.ஜி.வீதியை சேர்ந்த திலகராஜ் என்பவருக்கு ரூ.38 லட்சத்துக்கு விற்பனை செய்ய கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி திலகராஜ் முதல் தவணை தொகையாக ரூ.10 லட்சம் தந்தார். மீதி பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பணம் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, திலகராஜ் முறையாக பதிலளிக்கவில்லை. இதுகுறித்த வழக்கு தற்போது சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி எனது வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 10.7.2013 அன்று தடாகம் சாலையில் உள்ள இசைவு தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நானும் எனது மகன் அரவிந்த்குமாரும் கடந்த 10ம் தேதி தடாகம் சாலையில் உள்ள இசைவு தீர்ப்பாயத்தில் ஆஜரானோம். அங்கு சண்முகம் (51) என்பவர், தன்னை இசைவு தீர்ப்பாய நீதிபதி எனக்கூறி எங்களது வழக்கை விசாரித்தார். பிறகு, இந்த வழக்கை 19ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். பிறகு வழக்கு தள்ளிவைப்பு தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கூறினார். நான் கையெழுத்திட மறுத்தேன். பின்னர் அவரும் அவருடன் இருந்த சிலரும் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.யாரும் தப்பு செஞ்சா நீதிமன்றத்தில் முறையிடலாம் அந்த நீதிமன்றமே போலியாக இருந்தால் !!! பேசாம டாஸ்மாக்கிற்கு போகவேண்டியதுதான்


இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளிகிருஷ்ணா தலைமையிலான போலீசார் கோவை தடாகம் சாலையை சேர்ந்த சண்முகத்திடம் விசாரித்தனர். விசாரணையில் சண்முகம் வக்கீல்தான் என்பதும், நீதிபதி என்று கூறி ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது. சண்முகம், தன்னை நீதிபதி என கூறிக்கொண்டு தடாகம் சாலையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் போலி இசைவு தீர்ப்பாயம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சண்முகம் மீது, இந்திய தண்டனை சட்டம் 465 (போலி ஆவணங்களை தயாரித்தல்), 468 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்), 470 (தெரிந்தே தவறு செய்தல்), 170 (அரசு ஊழியர் எனக்கூறி ஏமாற்றுதல்) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து நேற்று மாலை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுபற்றி ஆர்.எஸ்.புரம் போலீசார் கூறுகையில், ‘‘கைதான சண்முகம், இதேபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்பது பற்றியும் விசாரிக்கிறோம். யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம்’’ என்றனர்.

கருத்துகள் இல்லை: