வியாழன், 18 ஜூலை, 2013

ராயல்டியை திருடுகிறார்கள்.. ஜி.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு ! பழைய இசையமைப்பாளர்களின் டியுன்களை திருடும் இளம் இசையமைப்பாளர்கள்

சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்" என்று எனது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார். சில ஆடியோ கம்பெனிகள் ராயல்டி விவகாரத்தில் இசை அமைப்பாளர்களை ஏமாற்றுகின்றனர். என்று ஜி.வி.பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்.
ராயல்டி என்பது ஒரு படைப்பாளையின் அடிப்படை உரிமை. அதை திருடுவது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமுமாகும்
ஜி.வி.பிரகாஷ் குமாரின் குற்றச்சாட்டு பெரும்பாலான இளம் இசை அமைப்பாளர்கள் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். மூத்த பாடலாசிரியர்களான நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை போன்றோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாடலாசிரியர்கள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்
இந்த  ஜிவிபிரகாஷ்  மற்றும்  ரஹ்மான்  போன்ற  இளம் இசையமைப்பாளர்கள்  முதலில்  தங்கள்  திருட்டுதனத்தை  நிறுத்திகொள்ளவேண்டும் !  பழைய இசையமைப்பாளர்களின்  டியுன்களை திருடி ரீமிக்ஸ் செய்து  கூத்தாடி வித்தை காட்டி கொண்டு எதோ பிறவி மேதை போல பாவனை பண்ணுவது சகிக்கலை ! கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் நாறிவிடுவீர்கள்
நன்றி ஜி.வி. பிரகாஷ், இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில் கூறியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் வெங்கட்பிரபுவும், ஜி.வி.பிரகாஷ்க்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்
இது போராடுவதற்கான சரியான நேரம். ஜி.வி.பிரகாஷ் கருத்தை இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்கள் முதல்பக்கத்தில் வெளியிட்டு ஆதரவு கூறியுள்ளன நன்றி என்று டுவிட்டரில் கூறியுள்ளார்
இளம் இசையமைப்பாளர் டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்
கண்டிப்பாக நாமும் ராயல்டியில் இருந்து பங்கு பெறவேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து கூறியுள்ளார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: