திங்கள், 15 ஜூலை, 2013

உத்தரகாண்ட்டில் காணாமல் போன 5700 பேரும் இறந்து விட்டதாக அறிவிப்பு

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி காணாமல் போனவர்கள் என
அறிவிக்கப்பட்டிருந்த 5700 பேர் இறந்து விட்டதாக உத்தரகாண்ட் அரசு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. காணாமல் போன இவர்களை கண்டுபிடிக்க இன்றுவரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நிலச் சரிவுகளில், புனிதப்பயணம் மேற்கொண்ட பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த மழையால் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புனித தலங்களும், நூற்றுக்கணக்கான கிராமங்களும் அழிந்தன.

அத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள். மொத்தம் 5,700 பேரை காணவில்லை என்று மாநில அரசு அறிவித்து இருந்தது.
அவர்களை தேடும்பணி ஒருபக்கமாக நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 15-ம் தேதிக்குள் அவர்கள் கிடைக்காவிட்டால் இறந்து விட்டதாக அறிவிக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்திருந்தது.
அவர்கள் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதையடுத்து, காணாமல் போன 5700 பேர் இறந்து விட்டதாக உத்தரகாண்ட் அரசு இன்று அறிவித்துள்ளது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: