வெள்ளி, 19 ஜூலை, 2013

2ஜி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகிறார் அனில் அம்பானி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக 2011ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி உள்ளிட்ட சிலரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க விரும்புவதாகவும், இதற்காக அவர்களுக்கு 'சம்மன்' அனுப்ப வேண்டும் என்றும் கோரி சி.பி.ஐ. சார்பில், டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற கோர்ட், அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இதற்காக சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: