உண்மையில் பரிதியின் அதிமுக பாய்ச்சல் ஒரு அரசியல் தற்கொலையே! வருந்துகிறோம் பரிதி!
மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவில் இருந்து
வந்து தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் பரிதி இளம்வழுதியை மேடையில்
வைத்துக் கொண்டே அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அசிங்கப்படுத்தினார்.
பதிலுக்கு பரிதி திமுகவினரை அசிங்கப்படுத்தி பேசினார்.
மதுரையில் அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று
இரவு நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில்
திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பரிதி இளம்வழுதி மற்றும் நிதி
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய அதிமுகவினர் சிலருக்கு பரிதியின் பெயரை சரியாக உச்சரிக்க
தெரியவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மதுரை வடக்குத் தொகுதி
எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கூறுகையில்,
இதோ இருக்கிறாரே பர் இறுதி இளம்வழுதி. இவரை எனக்கு ஏற்கனவே தெரியும். நான்
திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கையில் சட்டசபையில் இவர்
கருணாநிதியின் கண்ணசைவுபடி நடந்தவர். சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
பேசிக் கொண்டிருக்கையில் கருணாநிதி கண்ணசைப்பார். உடனே இவர் தன் அருகில்
இருக்கும் சபாநாயகரை லேசாக சுரண்டுவார். அந்த சிக்னல் கிடைத்தவுடன்
சபாநாயகர் ஆவுடையப்பன் அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேசவிடாமல் உட்கார
வைத்துவிடுவார்.
நம் ஓ.பி.எஸ். மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் சட்டசபையில் நன்றாக
பேசுகையில் அதை பாதியிலேயே நிறுத்தி, இருட்டடிப்பு செய்ய உதவியவர் இந்த
பரிதி. இவர் கருணாநிதியின் குடும்பத்தில் ஒருத்தராக இருந்தவர். கனிமொழிக்கு
மிகவும் வேண்டியவராக இருந்தார் என்றும் சொல்வார்கள். தற்போது இவர் நம்
விருந்தினர். கருணாநிதி குடும்பத்தில் என்ன நடக்கிறது, எப்படி எல்லாம்
அவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட வந்துள்ள பரிதிக்கு இடம்
கொடுத்து நான் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், நம் கட்சிக்கும், அவர்களின்
கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா? அதிமுகவில்
இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள், அவர்கள் கொள்கைக்காக தங்களின்
உயிரையும் கொடுப்பார்கள். உங்களைப் போன்று கரைவேட்டியை மாற்ற மாட்டார்கள்.
கட்சி தாவ மாட்டார்கள் என்றார்.
இதையடுத்து சென்னை பாஷையில் பேசிய பரிதி கூறுகையில்,
இங்கே பேசிய எம்.எல்.ஏ. போஸ் சொன்னாரு பரிதி நம் கட்சிக்கு விருந்தாளியாக
வந்திருக்கார்னு. நான் விருந்தாளியா? தயவு செஞ்சு இனி அப்படி சொல்லாதீங்க.
விருந்தும், மருந்தும் 3 நாளுன்னு சொல்வாங்க. வந்திட்டு 3 நாள்ல போறவன்
இல்லை நான். நான் மறுஜென்மம் எடுத்து காலமெல்லாம் அம்மாவின் காலடியில்
இருக்க வந்தவன். அம்மாவை பிரதமராக்க என் உடல் பொருள் ஆவியை கொடுக்க
வந்திருக்கிறேன். தயவு செஞ்சு அந்த வார்த்தையை சொல்லாதீங்க என்றார்.
பின்னர் அவர் கருணாநிதியை திருதாஷ்டிரன், தள்ளுவண்டி தாத்தா, மஞ்சள்துண்டு
மாமுனி, ஸ்டாலினை கோணவாயன், நோஞ்சான், அழகிரியை ஹார்லிக்ஸ் திருடன்,
விஜயகாந்தை விஸ்கிகாந்த் என்று விமர்சித்து பேசி அதிமுகவினரின் பாராட்டை
பெற்றார்.
tamil.oneindia.i
tamil.oneindia.i
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக