புதுடில்லி : மதிய உணவு திட்டத்திற்காக மத்திய அரசு அளித்த சுமார் ரூ.500 கோடி
நிதியை பீகார் அரசு கடந்த ஆண்டு திருப்பிக் கொடுத்துள்ளது. சமையல் பாத்திரங்கள்
வாங்குவதற்கு மட்டும் சிறிய அளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில்
பீகாரில் மத்திய உணவு கான்டிராக்ட் அல்லது பாத்திரம் வாங்கியது குறித்தும் யாரும்
கண்டுகொள்ளவில்லை. 2006-07 மற்றும் 2009-10 ஆண்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.462.78
கோடியையும், தங்களால் மதிய உணவு திட்டத்திற்காக செலவிட முடியவில்லை என பீகார் அரசு
திருப்பி அளித்துள்ளது. 2012ம் ஆண்டு வரை மதிய உணவிற்காக ஒதுக்கப்பட்ட நிதித் தொகை
பயனற்றதாக வங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அளித்த
நிதியை திருப்பிக் கொடுத்த பீகார் அரசு தற்போது மதிய உணவு திட்டத்தில் அலட்சியம்
காட்டி, அதன் விளைவாக 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய
வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக