புதன், 17 ஜூலை, 2013

கவிஞர் வாலியின் உடல்நிலை கவலைக்கிடம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் வாலியின் (82)
உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூன் 7-ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நூரையிரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட அவருக்கு சளி பிரச்னையும் இருந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரக் காலத்துக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். உடல் நிலை முன்னேற்றத்துக்கு போதிய ஓய்வு தேவைப்பட்டதால், வாலியை மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கியமானவர்கள் மட்டுமே வாலியை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.கடந்த இருபது நாள்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து வாலியின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: