வெள்ளி, 19 ஜூலை, 2013

மற்றொரு திவ்யா - இளவரசன் ? காவல்துறை என்ன செய்கிறது?

தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் சரகத் திற்குட்பட்ட வேப்ப மரத்தூர் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் என்பவரும் அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ப வரின் மகள் சுதா என்ப வரும் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) காதலித்து கடந்த மூன் றாண்டுகளுக்கு முன் 21.4.2010-ஆம் தேதி சின்ன திருப்பதி கோயிலில் திரு மணம் செய்து கொண்டு அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ள னர்.
கடந்த 3 ஆண்டு களாக சுரேஷ் பெற்றோ ருடன் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்து வந்ததோடு ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் காதலின் சாட்சி யாக ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும்...
இந்த நிலையில் இவர் கள் செய்து கொண்டது. காதல் திருமணம் என்று நம்பிய ஊரார். காலப் போக்கில் சுதாவின் சமூகம் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூ கத்தை சார்ந்தவர் என்று தெரிய வரவே ஜாதியின் கோர முகம் தெரிய வந்தது. 3 ஆண்டுகளாக வேப்பமரத்தூரில் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் நத்தம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் ஜாதி வெறியர்களின் பிடி இறுகியது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநா தன் (ஊர் கவுண்டர்) பெரியசாமி கோல்கரை (கவுண்டர்) தங்கராஜ் உட்பட்டோர் தலைமை யின் கீழ் ஊர் பஞ்சாயத் தினர் ஒன்றுகூடி வன் னிய இனத்தை சேர்ந்த பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரில் வசிப்பதை   ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஜாதிக்கு ஏற்பட்ட இழுக்காகும் எனவே அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டு வரவும். அப்படி ஜாதி கெட்டு கீழ் ஜாதிப் பெண்ணு டன் வாழ்ந்தால் உங்கள் குடும்பத்தின் மீது ஊர் கட்டுப்பாடு கொண்டு  வருவோம் என கூறி ஊர் திருவிழாவுக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து ஊர்நிதியில் இருந்து சுரேஷ் வாங்கி இருந்த பணத்தையும் கட்டவைத்ததுடன், ஊர்திருவிழாவில், ஊரில் நடக்கும் திருமணம், சாவு போன்ற நிகழ்வு களில் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள் ளக் கூடாது. ஊராரும் இவர்களை சேர்க்கக் கூடாது. பொதுகுழாயில் தண்ணீர் எடுக்கக் கூடாது கடைகளில் பொருள் வாங்கவோ கொடுக் கவோ கூடாது என ஊர் (கட்ட) பஞ்சாயத்து பேசி சுரேசு குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தெரிவித் தனர்.
அதிலும் வேறு எந்த ஜாதிப்பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக தெரி வித்துள்ளதாக கூறியது டன் இளவரசன் - திவ்யா வாழ்க்கை மாதிரி ஆக்கி விடுவோம் என்று மிரட் டியதாகவும் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர்.
காவல்துறை என்ன செய்கிறது?
இந்த ஜாதி வெறி பிடித்தவர்களின் மிரட் டலுக்கு பயந்து சுரேஷ் - சுதா ஆகியோர் 22.6.2013-இல் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் (குற்ற எண் 234/2013) இருந்தும் இதன் மீது காவல் துறை யின் நடவடிக்கை ஏதும் இல்லாததால் தினம் தினம் எங்கள் குடும்பத்தி னரை மிரட்டி வருகிறார் கள். ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத தால் 17.7.2013-இல் உயி ருக்கு பயந்து மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் (2ஆவது முறையாக) புகார் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று தம்பதிகள் தெரி வித்தனர் எங்களது வாழ்க்கை இன்னொரு நத்தம் இளவரசன் - திவ்யா வாழ்வைபோல ஆகிவிடக் கூடாது  என்றனர்.viduthalai.in

கருத்துகள் இல்லை: