திங்கள், 10 அக்டோபர், 2011

அரசியல் பேரன் சினிமா நடிகை இரவு ஹோட்டல் துப்பாக்கிசூடு

சென்னையின் மத்திய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு கார் நீண்ட   நேரமாக நின்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் அந்த காரை எடுத்துச் செல்ல முயல, செக்யூரிட்டிகள் தடுத்துள்ளனர். அந்தப் பெண் சினிமா பிரபலம். அவர் கருணாநிதியின் பேரன் குணாநிதிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இருவரும் அந்த ஹோட்டலில் சந்தித்திருக்கிறார்கள். பின்னர் நிதியின் காரில் ஏறி கிழக்குக் கடற்கரை சாலைக்குச் சென்றிருக்கிறார்கள். எல்லாம் முடிந்தவுடன் அதிகாலை நேரத்தில் நிதி அவரை ஹோட்டலில் டிராப் பண்ணியிருக்கிறார். காரை எடுக்கப்போன போதுதான் செக்யூரிட்டிகள் தடுத்துள்ளனர்.’’
‘‘உடன் அவர் நிதிக்கு போன் செய்தாரா?’’
‘‘கரெக்ட்... அவரும் வரவே வாக்குவாதம் முற்றியது. ‘நான் யார் தெரியுமா?’ என்று அவர் கேட்க, ஹோட்டல்காரர்கள், ‘யாராய் இருந்தால் என்ன?’ என்று சொல்ல, டக்கென தனது துப்பாக்கியைத் தூக்கியிருக்கிறார், நிதி. எடுத்த எடுப்பிலேயே எதிரில் நின்றவரை நோக்கிச் சுட, அவர் குனிந்து கொண்டதால் குண்டடிபடாமல் தப்பித்தார். உடன் இருவரும் காரில் தப்பிச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் முதல்வரின் உதவியாளரிடம் இருந்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போன் போனது. அப்போதைய உ ளவு அதிகாரியான ஜாபர் சேட் முதல் ஆளாக ஹோட்டலுக்குள் ஆஜரானார்.’’

‘‘அவருக்கு என்ன ஆர்வம்?’’
‘‘வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு சரியான ஆள் இவர்தானே... அவரும் மேலிடம் சொன்னபடியே, ஹோட்டல் உரிமையாளரை அழைத்துப் பேசி, வந்தவர் யார் என்பதைச் சொல்லியிருக்கிறார். ஹோட்டல்காரர்களிடம் நாசூக்காகப் பேசி, நிதியின் டிரைவர் காரை எடுக்க வந்ததாகவும், அப்போது ஹோட்டல் செக்யூரிட்டிக்கும் டிரைவ ருக்கும் தகராறு ஏற்பட்டது போலவும் புகார் செய்யப்பட்டு, சி.எஸ்.ஆர். மட்டும் கொடுக்கப்பட்டது. பின்னர் இருவரும் சமரசம் ஆனது போல ரெக்கார்டுகள் தயாரானது. இந்த வழக்குதான் இப்போது உயிர் பெற்றுள்ளது.’’
‘‘முடிந்துபோன வழக்கை எப்படித் திரும்ப விசாரிக்க முடியும்?’’

‘‘அதற்கும் வாய்ப்பு இருக்கிறதாம். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சட்ட ஆலோசனைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாம். வக்கீல்கள் திரும்ப விசாரணை நடத் தலாம் என்று நோட் போட்டிருக்கிறார்களாம். ஹோட்டல் ஊழியர்கள், என்ன நடந்தது, ஜாபர் சேட் வந்ததும் சி.சி. கேமராவில் இருந்த பதிவுகளை அழித்தது, எப்படியெல் லாம் மிரட்டி புகார் வாங்கினார் என்பது வரை அனைத்தையும் சொல்லியிருக்கிறார்கள். தேவைப்பட்டால் அதனை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலமாகக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘எத்தனையோ வழக்குகள் இருக்க, இந்த வழக்கில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்?’’
‘‘ஜாபரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்த போதும், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள சில அதிகாரிகள் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு இருக்கிறார்கள். இது தலைமைக்குத் தெரிய வந்ததும், நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரியை உளவுத்துறைக்குக் கொண்டு வந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்கள்.’’

‘‘இந்த வழக்கு எப்படிப் போகும்?’’
‘‘அ.தி.மு.க. மேலிடத்துக்கு ஜாபர் மீதுள்ள கோபம் இன்னும் தீரவில்லையாம். அவரைக் கைது செய்ய வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு என்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு வழக்கில் அவர் வீட்டில் சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து வேகமாகச் செயல்பட்டு வந்த அதிகாரிகள் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்துதான் மேலிடம் நேரடியாகவே இந்த வழக்கை கவனித்து வருகிறார்களாம். ஜெயேந்திரர் வழக்கை எப்படி கவனித்தார்களோ... அதுபோல இந்த வழக்கின் மீதும் மேலிடத்துக்கு கண் இருக்குதாம்...’’

‘‘சட்டப்படி நடந்தால் எல்லோருக்குமே நல்லது. பதவியில் இருக்கும் போது ஆட்டம் போடும் அதிகாரிகளுக்காக இதைச் சொல்கிறேன்...’’

‘‘தி.மு.க.வினர் கூட டென்ஷனாக இருக்கிறார்களாம்...’’ அடுத்த மேட்டருக்குத் தாவினார்.

‘‘கொஞ்ச நாளாகவே அப்படித்தானே இருக்கிறார்கள்...’’

‘‘தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்குப் போட்டார்கள். அதையடுத்து அவர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் போடப்பட்டது. இதையடுத்து தி.மு.க. மாஜி மந்திரிகள் உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் செய்யாமல் பதுங்குகிறார்கள். ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனாலும் மக்களுக்கு இவர்கள் செய்த கொடுமைகள் திரும்பத் தொடங்கியிருக்கிறதாம். தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்குகளையெல்லாம் விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க தீவிரமாக ஆலோசனை நடந்து கொண்டு இருக்கிறதாம். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, தனி கோர்ட் போட்டு விசாரணை நடத்தியதுபோல, அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதே, தண்டனை வாங்கிக் கொடுத்துவிடும் மனநிலையில் ஆளும்கட்சி இருக்கிறதாம். தி.மு.க. ஆட்சியில் சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டது. அதே இடத்திலேயே புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமையுமாம்...’’

‘‘மூன்றாவது அட்டாக் என்று சொல்லுங்கள்...’’

‘‘அப்படிக் கூட வைத்துக் கொள்ளலாம்... உடல் நலம் இல்லாமல் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு அதிகமாகச் செல்லவில்லையாம். குறிப்பாக தென்மாவட் டங்களுக்குச் செல்வதை தவிர்த்துவிட்டாராம்... திருச்சி இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துகிறாராம். கருணாநிதி கூட இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் மட்டுமே பிரசாரம் செய்வார் என்கிறார்கள்.’’

‘‘இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டெல்லி போகப்போவதாகச் சொல்கிறார்களே...’’

‘‘17-ம் தேதி கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. இந்த முறை எப்படியும் விசாரணை தள்ளிப்போகாது என்று வக்கீல்களும் டெல்லியில் உள்ள கட் சிக்காரர்களும் சொல்லி வருகிறார்களாம். அதனால், அவர் 16-ம் தேதி டெல்லி செல்வார் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். 17-ம் தேதி கோர்ட் நடவடிக்கைகளை நேரில் பார்த்து மகளைக் கையோடு சென்னைக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்...’’

‘‘ஆனால் அவரது திட்டம் எல்லாம் ஒவ்வொரு முறையும் தவிடு பொடியாகிவிடுகிறதே...’’

‘‘அது என்னவோ உண்மைதான். 10-ம் தேதிக்குப் பிறகு தயாநிதி மாறன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியொரு நிலை வந்தால், 17-ம் தேதியும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்காது என்றே சொல்கிறார்கள்.’’

‘‘ஐயய்யோ...’’

‘‘தயா கைதானால் அவருடைய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டியது இருக்கும். எனவே, அவர் தரப்பு வக்கீல்கள் வாதம் செய்ய எத்தனை நாட்கள் எடுப்பார்கள் என்பது தெரியாது. அதன் பின்னர் சி.பி.ஐ. தரப்பில் வாதம் செய்வார்கள். அதையடுத்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன் பின்னரே ஜாமீன் பற்றி யோசிக்க வேண்டும்.’’

‘‘ஆமாம்... ஸ்டாலின் பற்றிய புத்தகம் ஒன்று வெளி வர உள்ளதாமே...’’

‘‘பத்திரிகையாளர் ஒருவர் மாறன் சகோதரர்கள் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். அவர்கள் வளர்ந்த விதம் பற்றியும், தொழில் வளர்ச்சிக்காக ஆட்சியும் அதிகாரமும் எப்படி பயன்பட்டது என்பது பற்றியும் எழுதியிருந்தார். அந்தப் பத்திரிகையாளர்தான், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலை வைத்து ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது, அவர் துறையில் நடந்த ஊழல் பற்றி புத்தகமாகத் தொகுத்து ‘கைப்புள்ள ஸ்டாலின்’ என்ற பெயரில் வெளியிடுகிறாராம். இதுதான் நான் கொண்டு வந்த ரகசியம்’’ என்று தன் கையில் இருந்த பேப்பரை விரித்துக் காட்டினார் சுவாமி. அதில் விரைவில் வெளிவர உள்ள ஸ்டாலின் பற்றிய புத்தகத்தின் அட்டைப் படம் இருந்தது.
thanks kumudam +shobana uta

கருத்துகள் இல்லை: