



இயற்கையிலே எழில் பெற்று விளங்கும் எமது நாட்டில் குடிகொண்டிருந்த கொடூரமான போர், வெற்றிகரமாக அடக்கப்பட்ட பின்னர் மக்கள் அனைவரும் இன்று சுதந்திரக் காற்றை அனுபவித்துக் கொண்டும், நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் உள்ளனர்.யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அநேகமான மக்களும் இன்று தங்கள் பழைய இருப்பிடங்களில் அல்லது தாங்கள் நீண்டகாலமாக வாழ்ந்த பிரதேசங்களில் தறபோது குடியயமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள்.
இவ்வாறாக நாட்டின் சீரற்ற நிலையை சீர்செய்து மக்களின் சமூக வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த எமது அரசு பொருளாதார பிரச்சினைகளுக்கும் சிறந்த முறையில் தீர்வைக் காணக்கூடிய வகையில் பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
யுத்தத்திற்காக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான பணம் இன்று அரசாங்கத்தினால் வீடமைப்பு
நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகின்றது. வீதி அமைப்பு, அரசாங்க கட்டிடங்கள் குறிப்பாக, பாடசாலை, ஆஸ்பத்திரிகளை திருத்தி அமைத்தல் ஆகியவற்றுடன் பெருந்தொகையை வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்காகவும் செலவிடப்பட்டு வருகின்றன.
இந்த அபிவிருத்தித் திட்டங்களில் மேம்பாலங்களை அமைத்தல், நெடுஞ் சாலைகளை அமைத்தல், பாலங்களை அமைத்தல், விவசாய நிலங்களுக்குரிய நீர்ப்பாசனத் திட்டங்களை திருத்தியமைத்து கால்வாய்களை செப்பனிடுதல் போன்ற பணிகளையும் வெற்றிகரமான முறையில் அமுல்ப்படுத்தி வருகின்றது.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களில் வீடமைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களுக்காக 155 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 2011 இல் 400 மில்லியன் ரூபாவை அரச ஜனசெவன திட்டத்தின் கீழ் செலவிடுவதற்காக ஒதுக்கியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள், கொழும்பு மாநகரம் உட்பட நாடெங்கிலும் இன்று வீடுகள் ஜனாதிபதி அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சர்களினால் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையை ஆசியாவின் ஒரு விந்தைக்குரிய நாடாக மாற்றும் பெருமுயற்சியில் ஈடுபட்டு, கொழும்பு மாநகரை ஒரு நவீன நகரமாக சர்வதேச தரத்திற்கு முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் தற்போது மகத்தான வெற்றியடைந்துள்ளன. இதனால் இன்று தெற்காசிய நாடுகளில், உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவதில் கூடுதலான அக்கறை காட்டி வருகிறார்கள்.
இயற்கையின் கொடையான இலங்கையில் பலதரப்பட்ட காலநிலைகள் இருப்பதனாலும், மலையகத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்கும், எமது பண்டைய மன்னர் ஆட்சிக் காலத்தின் சிதைவுகளை சென்று பார்ப்பதற்காகவும், இயற்கை சூழலில் பாதுகாப்பாக இருக்கும் வன விலங்குகளை கண்டுகளிப்பதற்காகவும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார்கள்.
அது மற்றுமன்றி கடல் போர்வைக்குள் அமைந்துள்ள ஓர் முத்தான எமது நாட்டின் திருகோணமலையின் நிலாவெளிக் கடற்கரையிலும், மட்டக்களப்பின் பாசிக்குடா கடற்கரையிலும், தென்னிலங்கையின் பெந்தோட்ட, ஹிக்கடுவ ஆகிய இடங்களில் உள்ள நீலக்கடற்கரையிலும் நீராடி, வெப்பம் காய்வதற்கும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகளவில் எங்கள் நாட்டுக்கு வருகை தருகிறார்கள்.
இவ்விதம் நாடு பல்வகையிலும் பொருளாதார ரீதியில் வளர்ச் சியடைந்து வரும் இன்றைய சூழ்நிலையில், நாம் அனைவரும் பெருமகிழ்ச்சியடையும் வண்ணம் எமது நாட்டின் கடற்பிரதேசத்தில் எரிவாயு இருக்கின்றது என்பதை இயற்கை அண்னை எங்களுக்கு புலப்படுத்தியுள்ளது. இதனை நாம் உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த நாடா மாறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.i
1 கருத்து:
எல்லாம் கேட்க நன்றகத்தானுள்ளது எங்கடை புலப்பெயர்வாழ் தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேணுமே. தாங்கள் வெளிநாட்டிலை நிம்மதியாக இருக்கலாம் ஆனால் ஊரிலை உள்ளதுகள் அப்படியிருக்க ஏலாது.
கருத்துரையிடுக