லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் கைது!.
சிர்தே: லிபியாவில் அதிபர் கடாபியின் மகன் முடாசிம் கடாபியை புரட்சி படையினர் கைது செய்துள்ளனர். லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது. மாற்று அரசு கவுன்சில் என்ற பெயரில் புரட்சி படையினர் கடாபியை எதிர்த்து போரிட தொடங்கினர். அவர்களுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆதரவு அளித்ததில் குடும்பத்துடன் கடாபி தலைமறைவானார். முக்கிய நகரங்கள் புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சிர்தே மற்றும் சில பகுதிகள் மட்டும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினரிடம் இருந்தன.அவற்றையும் கைப்பற்ற புரட்சி படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிர்தேவில் பதுங்கியிருந்த கடாபியின் மகன் முடாசிம் நேற்று கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பென்காசிம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். கடந்த 75ம் ஆண்டு பிறந்த முடாசிம், டாக்டராகவும் ராணுவ வீரராகவும் பணிபுரிந்தார்.
பின்னர் லிபியாவின் தேசிய ஆலோசகர் பதவிக்கு வந்தார். கடாபிக்கு அடுத்து அதிபர் பதவிக்கு வருவதில் முடாசிம்முக்கும் இவரது சகோதரர் சைப் அல் இஸ்லாமுக்கும் இடையில் மோதல் நிலவி வந்தது. அதற்குள் ஆட்சி போனதால் இருவரும் தலைமறைவாக இருந்தனர். பனி வாலித் பகுதியில் சைப் பதுங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக