திங்கள், 10 அக்டோபர், 2011

சிரஞ்சீவி மகனுக்கு வரதட்சணை ரூ 120 கோடி & ஒரு குட்டிவிமானம்!


Ram Charan and Teja-Upasana Kamineni
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணுக்கு வரதட்சணையாக மட்டும் ரூ 120 கோடியும் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட குட்டி விமானமும் வழங்கப்பட உள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் தமிழகத்தில்தான்.

1980-ல் தஞ்சாவூரில் பிறந்தார். ஊட்டி கான்வென்ட் மற்றும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்.
2007-ல் சிறுத்த என்ற தெலுங்கு படம் மூலம் ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமானார். 2009-ல் அவர் நடித்த மகதீரா படம் ரிலீசாகி ஆந்திராவில் வசூலை அள்ளியது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப் பட்டது.இப்போது ரச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மணமகளும் பார்த்துவிட்டனர். மணமகள் பெயர் உபாசனா கேமினேனி. அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி இவர். அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், பி பாஸிடிவ் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ளார். இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவியுள்ளது.

திருமண பரிசாக ஜெர்மனியில் தயாரான நவீன ரக குட்டி விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: