ஈரோடு : ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த மகேஷ் குமார், தனது மனைவி ஷமீலா குறித்தும், அவருடன், அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்தும், இவர்களால் தனது காதல் வாழ்க்கை வீணாகிப் போனதைக் குறித்தும் எழுதி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை நபர்களையும் கைது செய்ய ஈரோடு போலீஸார் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
மகேஷ் குமார் தற்கொலையும், அதற்கு முன்பு அவரது மனைவி ஷமீலாவை அவர் கொலை செய்ததும் தமிழகத்தையும் கேரளாவையும் உலுக்கியுள்ளது. ஒரு காதல் வாழ்க்கை எப்படி கள்ளத் தொடர்புகளால் சிக்கி சீரழிந்து சின்னபின்னமாகிப் போனது என்பதை தனது கடிதங்கள் மூலம் உலகுக்கே அறிவித்து விட்டு செத்துள்ளார் மகேஷ்குமார்.
மூணாறு விடுதியில் தனது மனைவியைக் கொலை செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்த மகேஷ்குமார் அங்கு தனது காதல் மனைவியின் நினைவை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாவதற்கு முன்பு போலீஸாருக்கு மகேஷ் குமார் எழுதி வைத்த விரிவான கடிதம் இப்போது மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது மனைவியின் லீலைகள், அவரது கள்ளத் தொடர்புகள், அதனால் தான் பட்ட வேதனைகள், அவமானங்கள், தனது வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார் மகேஷ் குமார்.
மேலும் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்த விவரங்களையும், அவர்களது தொலைபேசி எண்களையும் கூட அவர் குறித்து வைத்துள்ளார்.
இந்தக் கடிதம் ஈரோடு போலீஸாரையே அதிர்ச்சி அடைய வைத்து உலுக்கி விட்டதாம். அழகான காதல் வாழ்க்கை இப்படி அகோரமாக சிதைந்து போக காரணமாக இருந்த யாரையும் விடாமல் அத்தனை பேரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மகேஷ் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 10 பேரையும் பிடித்துக் கைது செய்து வழக்குத் தொடர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகேஷ் குமார் கடிதத்தில் உள்ள ஒருவரையும் விடாமல் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவும், இந்த வழக்கில் எந்த அளவும் பிசகு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காவும், திருமணமானவர்களின் வாழ்க்கையில் புகுந்து சீரழிக்கும் கயவர்களுக்கு இது சரியான பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் போலீஸார் இந்த வழக்கை மிகவும் கவனத்துடன் கையாள முடிவு செய்துள்ளனராம்.
மதுரையைச் சேர்ந்த ஒருவன்தான் ஷமீலாவை மிகப் பெரிய அளவில் தன் பக்கம் இழுத்து சீரழித்ததாக கூறப்படுகிறது. இவனைத்தான் மகேஷ்குமாரும் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார். எனவே இவனை முதலில் பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மகேஷ்குமாருக்குத் தெரிந்து 10 பேர்தான் உள்ளனரா அல்லது அதற்கு மேலும் ஷமீலாவுடன் வேறு யாரேனும் தொடர்பு வைத்திருந்தனரா என்பதை அறியவும் போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பத்து பேரையும் பிடித்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.
இதனால் ஈரோடு மகேஷ்குமார், ஷமீலா மரண வழக்கு மிகப் பெரிய பரபரப்பான விஷயமாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக