யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கும், அனலைதீவுக்கு மிடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் படகை நீரில் மூழ்கும் அபாயநிலையிலிருந்து கடற்படையினர் காப்பாற்றியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
காரைநகரிலிருந்து அனலைதீவை நோக்கி 33 பயணிகளுடன் சென்ற ‘யோகலக்ஷ்மி 01’ எனும் பயணி கள் படகே நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியது.இந்தப் படகு அனலைதீவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது கடலிலிருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானதால் படகில் துளையொன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படகு கடலில் மூழ்கும் அபாய நிலையை எதிர்நோக்கியது என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடற்படையினருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு விரைந்த கடற்படையினரின் இரண்டு படகுகள் குறித்த மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற் றியதுடன், படகையும் பாதுகாப்பாகக் கரைக்கு இழுத்துச் சென்றதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக