தான் நடித்த ரமணா படத்தைப்போல நிஜத்திலும் லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்று தம்பட்டம் அடித்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதாவோ, ஒரு படி மேலே போய், இல்லை...கொஞ்சம் ஓவராக போய், இல்லை...இல்லை.....ரொம்பவே ஓவராக போய்.... கேப்டன் விஜயகாந்த் லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த பிறகுதான் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார்; ஆர்ப்பாட்டம் செய்தார் என்று கொக்கரித்து வருகிறார். ஆனால் தேமுதிகவினரோ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வருகிறார்கள்.கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தேமுதிகவினர் பணம் கொடுப்பதாக புகார் வந்தது.
தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறிவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம், திருவூர், செவ்வாப்பேட்டை,வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் 13.10.2011 அன்று, ஒரு ஓட்டுக்கு ரூபாய் 200 கொடுத்திருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.லஞ்சத்தை ஒழிப்பேன்..லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார் விஜயகாந்த். கேப்டனை பார்த்துதான் காந்தியவாதி அன்னாஹசாரேவே போராட்டம் செய்கிறார் என்கிறார் பிரேமலதா. ஆனால் இவர்கள் கட்சியினரோ இப்படி ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களே. இவர்கள் செய்வதை பார்க்கும்போது விஜயகாந்த் மீதும் சந்தேகம் எழுகிறது என்று கூறுகிறார்கள் அப்பகுதியினர்.லஞ்சத்தை ஒழிப்பேன்..ஒழிப்பேன் என்று கூவுவதற்கு முன்பு தொண்டர்களை கூப்பிட்டு வைத்து லஞ்சம் ஒழிப்பேன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று பயிலரங்கம் நடத்தலாம் விஜயகாந்த்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக