எனது அண்ணனே உயிரிழந்துள்ளார். எனது தமயனான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்வதற்கான சதி தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் தெரிய வந்தன.
அதனையடுத்து கனடாவில் வாழும் நானும், நான்கு சகோதரிகளும் சகோதரனும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துதிற்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்களை எழுதினோம்.எமது சகோதரனின் நிலையை தெளிவு படுத்தி அவரது பாதுகாப்பை பலப்டுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம். இது தொடர்பாக நாம் இரண்டு பக்கங்கள் உடைய கடிதமொன்றை அனுப்பினோம்.
எமது அரசியல் வரலாற்றில் அனைத்து விடயங்களும் அந்த கடிதத்தில் விபரிக்கப்பட்டிருந்தன. எமது சகோதரனை பாதுகாப்பற்கான தார்மீக கடமை அவர்களுக்கு உளளது என்பதை நினைவூட்டினோம்.
எமது தமயனுக்கு எஸ்.ரி.எப் இல் இருந்தோ, வேறு பாதுகாப்பு எதுவும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு வழங்கப்படாததன் பெறுபேற்றை இன்று நீங்கள் காணமுடியும்.
40 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை உடலுக்குள் சுமந்து மரணித்திருக்கும் எமது சகோதரனை காணும் போது எமக்கு கவலையாக உள்ளது. இது மிகவும் மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட கொலையாகும், எமக்கு நியாயம் தேவைப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காகவும், இடதுசாரி அரசியலுக்காகவும் பெரும் அர்பணிப்புக்களைச் செய்த அவர் இன்று உயிருடன் இல்லை. அவரின் வாழ்வதற்கான உரிமையை தாய்நாட்டிலுள்ள மற்றுமொருவர் பறித்தெடுத்துள்ளார்.
எமக்கு நியாயம் தேவைப்படுகின்றது. எமக்கு இதுவரை எவ்வித உறுதிமொழியும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் நியாயம் வழங்கப்படும் என பிரேமச்சந்திர குடும்பத்தாருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் உறுதி அளிக்கப்பட வேண்டும்.
இந்த நியாயம் நிலைநாட்டப்படும் என இதுவரை எவரும் எமக்கு அறிவிக்கவில்லை. எமக்கு நியாயத்தை வழங்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதிலுள்ள பாரதூரத் தன்மையை நாம் கனடாவில் இருந்து அவதானித்தோம்.
கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவருக்கு இருந்த ஆபத்தை கட்சிக்குள் இருந்தவர்களால் ஏன் உணர முடியாமல் போனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எமது அண்ணனின் இரண்டு பிள்ளைகளும், அக்காவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். என்ன செய்யப் போகின்றோம் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவர் பாடுபட்ட கட்சிக்குள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அது குறித்து நாம் மிகவும் கவலையும், ஆத்திரமும் கொண்டுள்ளோம். என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக