தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் !
கடந்த 01.10.2011 மாலை 6.00 மணி முதல் 02.10.2011 காலை 6.00 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் என்ற தலைப்பில் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பில் மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, தியாகு, சந்திரபோஸ், நாகை திருவள்ளுவன், வடிவேல் ராவணன் மற்றும் சிபிஜ மற்றும் சிபிஜ[எம்] அமைப்பினர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்ஒட்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வேன்களில் திரட்டி வரப்பட்டிருந்தனா. பல்வேறு தமிழ் தேசிய, திராவிட, தலித், இடதுசாரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.வழக்கறிஞர் வல்லரசு மீது தாக்குதல்
இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்து நன்கொடையும் திரட்டியவர் வழக்கறிஞர் வல்லரசு. இவர்தான் தற்போது ஹென்றி டிபேன் மீது புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சிக்கு சென்ற வழக்கறிஞர் வல்லரசு அங்கு நடந்தது பற்றிக் கூறியதுநான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு 8 வயது இருக்கும்போது என் தந்தை கந்தசாமி இறந்து போய்விட்டார். 9 வயதில் என் தாயார் சுகந்தியும் இறந்து போய்விட்டார். சிறுவயது முதல் அண்ணன், தம்பிகள் இல்லாமல் தாய், தந்தையரை இழந்து பல்வேறு நபர்களின் உறுதுணையுடன் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை சொக்கிகுளத்தில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அங்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனராக பணியாற்றி வருகிற திரு.ஹென்றி டிபேன் என்பவரின் மருமகனும் பணியாளருமான திரு.பிரதீப் சாலமோன் என்பவர் என்னிடம் பிரச்சனை செய்து வந்தார். மக்கள் கண்காணிப்பகத்தின் அனைத்து அதிகாரங்களையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பிரதீப் சாலமோன் இருந்ததனால் அவருக்கு எதிராக எந்தப் புகாரும் மக்கள் கண்காணிப்பகத்தில் தெரிவிக்க முடியாது. அப்படி எவரேனும் பிரதீப் சாலமோனின் அத்துமீறலை தெரிவிக்க விரும்பினால் புகார் கொடுத்தவரே பாதிப்பிற்கு உள்ளாவார்.குறிப்பாக பணி நீக்கம் செய்யப்படுவார். இத்தகைய நிலையைத் தொடர்ந்து நான் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்க விரும்பாமல் பணியில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.
மக்கள் கண்காணிப்பகத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்ற ஜான் வின்சென்ட் என்பவரிடம் ஜூனியராக உள்ளேன். ஜான் வின்சென்ட் நடத்துகிற தனி வழக்குகளுக்கு உதவி செய்து வந்தேன்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவ்வார்ப்பாட்டத்திலிருந்த பிரதீப் சாலமோன் என்னிடம், பேனரைப் பிடி என்று சொன்னார். நான் மக்கள் கண்காணிப்பக ஊழியர் இல்லாததால் மறுத்தேன். அதற்கு பிரதீப் சாலமோன், நீ வழக்கறிஞர் என்றால் பேனர் பிடிக்க மாட்டாயா? என்று கூறியது மட்டுமல்லாமல் ஆபாசமாக திட்டினார். இதனால் எனக்கும் பிரதீப் சாலமோனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரண தண்டைன ஒழிப்பு சம்பந்தமான தூங்காநிலை மாநாடு ஒன்றினை அக்டோபா 1ம் தேதி மாலை மதுரை அரசரடி இறையியல் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனா. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த இரவு சுமார் 10.00 மணியளவில் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று திரும்பும்போது என் வாகனம் உடைந்து கீழே கிடந்தது.அருகில் இருந்த பிரதீப் சாலமோனிடம் எதற்காக என் வாகனத்தை கீழே தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு உன்னை எவன்டா இங்கே வரச் சொன்னது என்று சொல்லி அவமானப்படுத்தினார்.
அதன்பின் நான் அங்கிருந்த மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றியிடம் ஐயா உங்கள் மருமகன் எப்போது பார்த்தாலும் என்னை இழிவாகப் பேசுகிறார், அவமானப்படுத்துகிறார்.தயவுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன். அதற்கு ஹென்றி டிபேன் என் மருமகனை பற்றி எனக்குத் தெரியும்டா, நீ யாருடா புகார் கொடுப்பது, என்று கூறிக்கொண்டே என் கழுத்தை நெறித்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் என் சட்டையைப் பிடித்து தூக்கி தரதரவென்று இழுத்துக் கொண்டே வெளியே போடா ராஸ்கல் என்று கத்தினார். நான் அவரது பிடியில் சிக்கிக்கொண்டு, ஐயா நான் ஒரு வழக்கறிஞர் என்னை இப்படி பொதுக்கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சினேன். அப்போது என் செருப்பு கழண்டு கொண்டது. நான் ஹென்றிடிபேனிடம் ஐயா என் செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியதற்கு அவர் எடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை. வாடா என்று கூறிக்கொண்டே என்னை வெளிவாயில்வரை இழுத்து வர அங்கு பிரதீப் சாலமோனும் பலரும் சேர்ந்து கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
பிரதீப் சாலமோனின் மனைவி அனிதா,ஹென்றியின் மனைவி சிந்தியா என்னை செருப்பால் தாக்கினார். செருப்பு என் மேல் படாமல் கீழே விழுந்தது. உடம்பு மற்றும் காலில் கடுமையான வலி எற்ப்பட்டது. அவசர போலிஸ் 100க்கு தகவல் சொன்னேன். நான் கடந்த 02.10.21011 முதல் 08.10.2011 வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். ஏற்க்கனவே பிளேட் வைக்கப்பட்டிருந்த எனது காலில் அடிபட்டதால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனிடையே கடந்த 04.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் என்னிடம் விசாரணை செய்வதற்காக காவல் உதவி ஆணையா திரு.கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் கண்காணிப்பகத்தின் வாகனமும் அதில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடிய பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட சிலரும் இருந்தனர். உதவி ஆணையர் என்னிடம் என்ன நடந்தது என்று விசாரணை செய்த பின்பு ஹென்றி டிபேன் செல்வாக்கு உள்ளவர். டிஸ்சார்ஜ் ஆகுங்கள் என்று சொன்னார்.
தற்போது தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தொண்டு நிறுவன தொடர்புகள் இதெல்லாம் கொண்டு இப்பிரச்சனையை திசை திருப்புகிற முயற்சியிலும் ஹென்றிடிபேன் ஈடுபட்டு வருவதாக அறிகிறேன்”
உயர்நிதி(!)மன்றக் கூத்து!
மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 04.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி வழக்கறிஞர் ஆறுமுகம் (வழக்கறிஞா. திரு.லஜபதிராயிடம் இளம் வழக்கறிஞராக பணிரிந்தவர்} மூலம் மனுதாக்கல் செய்தனர் ஹென்றி டிபேன், அவரது மனைவி சிந்தியா, மகள் அனிதா, மருமகன் பிரதீப் சாலமன் ஆகியோர். தசரா விடுமுறை என்பதால் விடுமுறை கால நீதிபதியாக சி.எஸ்.கர்ணன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். 04.10.2010 அன்று விசாரிக்கப்பட வேண்டிய மனுக்கள் தவிர கூடுதலாக 14 மனுக்கள் பட்டியலின் இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட உத்தரவு வழங்கியிருந்தார் நீதிபதி கர்ணன். போலிஸ் தரப்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் திரு.பாலசுப்பிரமணியன். மாலை 5.30 மணி வரை ஹென்றிடிபேனின் மனுவே கிடைக்கப்பெறாத வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்திற்கு மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர்கள்தான் மனுவின் நகலையே கொடுத்தனர். போலிஸ் வழக்கறிஞர் பின்னாலே தான் மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர்கள் நின்றிருந்தனர். ஹென்றி டிபேன் மனு 10வது வழக்காக இருந்தது. 8வது வழக்கு டி. லஜபதிராய் என்று அழைக்கப்பட்டவுடன் என்ன வழக்கென்று கேட்காமலேயே USUAL DIRECTION GRANTED என்று சொன்னார் நீதிபதி கர்ணன். [வழக்கறிஞர் லஜபதிராய் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதிக்கு சொல்லப்பட்டிருந்தது போலும்.(ஹென்றி அண்ணே உங்க அளவுக்கு சாமர்த்தியம் கர்ணனுக்கு இல்லண்ணே!] நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள் இது வேறு வழக்கு என்று தெரிவிக்க, பின்பே நிதானத்திற்கு வந்த நீதிபதி 8&9 வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, 10வது வழக்கை சி.எம்.ஆறுமுகம் அவர்கள் தாக்கல் செய்ததை விசாரணைக்கு எடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் வல்லரசு சார்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி புகார்தாரர் சிகிச்சையில் இருப்பதால் இவ்வழக்கில் பிணை உத்தரவு வழங்க கூடாது, மேலும் புகார்தாரர் தரப்பை தெரிவிக்க மனுதாக்கல் செய்ய காலஅவகாசம் கொடுத்து வழக்கை திங்கள் கிழமையன்று ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அரசுதரப்பு வழக்கறிஞா; புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டார் என்று பொய்யான தகவலைச் சொல்ல அதை மறுத்து சிகிச்சையில் இருப்பதற்கான ஆவணங்களை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தரவு வழங்குவதிலேயே முனைப்பாக இருந்து உத்தரவு வழங்குவதை எதிர்த்தால் நீதிமன்ற அவமதிப்பு எடுப்பேன் என்று சொல்ல, இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிலடி கொடுக்க அதையும் மீறி நீதிபதி கர்ணன் ஹென்றி டிபேனுக்கு ஆதரவாக பிணை உத்தரவை வழங்கினார்.மேற்படி இச்சம்பவத்தில் ஹென்றி டிபேனால் போலிசு தரப்பு வழக்கறிஞரும், நீதிபதி கர்ணனும் விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்கள் என்பது அன்று (04.10.2011) நீதிமன்றத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.
ஹென்றி டிபேனுக்குப் பிணை வழங்கிய நீதிபதி கர்ணன் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனின் தம்பிக்கு சப்ளை அண்ட் சர்வீஸ் செய்து பணம் கொடுத்து பதவிக்கு வந்தவர் என்பது ஊரறிந்த உண்மை. நீதிபதி கர்ணன் அவர்கள் 04.10.2011 அன்று கே.என்.நேரு, கரூர் கே.சி.பழனிச்சாமி, நடிகை குஷ்பு, ஹென்றி டிபேன், பொட்டு சுரேஷ் ஆகியோருக்கு உரிய நீதி வழங்கி தனது கடைசி தின வசூலை சிறப்பாக முடித்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய துணை ஆணையர் கணேசன் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோர் ஹென்றி டிபேன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வல்லரசை மருத்துவமனையில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.
இப்படியாக காவல்துறையுடனும் நீதித்துறையுடனும் கள்ளக்கூட்டு வைத்து செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பக ஹென்றிடிபேன்தான் காவல் துறை சித்திரவதை மற்றும் நீதித்துறை ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாக நாடகமாடி வருகிறார்.
மக்கள் கண்காணிப்பகத்தில் குடும்ப ஆதிக்கம்!
ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. அங்கு ஹென்றி டிபேனும் அவரது குடும்பத்தினரும்தான் எல்லாம்.அவர்களை மீறி யாரும் பேச முடியாது.ஊழியர்களை எல்லாம் அடிமைகளாகத்தான் நடத்துவார்கள். எதிர்க்கும் நபர்களை திட்டமிட்டுப் பழிவாங்கி விடுவார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.2005 ஆம் ஆண்டு ம.க.இ.க.தோழர்களிடம் பேசியதற்க்காக ஹென்றி டிபேன் நடத்திய வழக்கமான “தீவிரப் புலன்விசாரணையை” சுயமரியாதையோடு எதிர்த்து நின்ற ஓட்டுநர் மோகன்குமாரிடம் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்துக் கொண்டு , சம்பளமும் தராமல் வம்பு செய்ய, பின்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அதன் பிறகே ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்தார் இந்த மனித உரிமைக் காவலர் ஹென்றி டிபேன். அதன் பின் தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார் மோகன் குமார்.கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்க்காக ஆறு வருடங்களாய் மக்கள் கண்காணிப்பகத்திற்க்காக கடுமையாக உழைத்த உமா மகேஸ்வரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். விளக்கம் தரக்கூட மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டார். இப்படி ஹென்றி டிபேனின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமானது. தற்போது வழக்கறிஞர் வல்லரசுவின் சீனியராக இருந்த ஒரே குற்றத்திற்க்காக 20 வருடங்கள் ஹென்றிக்காக பணியாற்றிய வழக்கறிஞர் ஜான் வின்செண்ட் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப் பட்டிருக்கிறார். நெஞ்சில் இரக்கமற்ற கொடிய முதலாளிகள் கூட ஹென்றி டிபேன் போல் நடக்கத் துணிய மாட்டார்கள். முன்னறிவிப்பின்றி டிஸ்மிஸ் செய்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் எவ்வளவு துன்பப்படும் என்பதை இந்த ஏ/சி அறைக் கோமான் அறிய மாட்டார் போலும்.ஒரு வேளை இத்துன்பங்களை ஆவணமாக்க யாராவது பண்டு கொடுத்தால் அதை ஆவணமாக்கும் வேலையை வேண்டுமானால் சிறப்பாகச் செய்வார் ஹென்றி. இதோடு மக்கள் கண்காணிப்பகத்தில் பணிபுரியும் ஹென்றியின் மனைவி சிந்தியாவின் ஆணவம்,அதிகாரத் திமிர் ஊரறிந்தது. மக்கள் கண்காணிப்பகத்தில் தங்கிப் படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களை சொந்த வேலைக்குப் பயன்படுத்துவது முதல் தனக்குப் பிடிக்காதவர்களை ஹென்றியிடம் போட்டுக் கொடுத்து பழிவாங்குவது வரை அத்தனையும் செய்வார் இந்தச் (ச்சீ……)சீமாட்டி. இதற்க்கடுத்து மகள் அனிதா, மருமகன் சாலமோன் என்று குடும்பக் குத்துவிளக்குகளின் அதிகார எல்லை நீளூம்.
மக்கள் கண்காணிப்பகம் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளக் குழந்தை!
இப்படி நடந்து வரும் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. உலகெங்கிலும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்ற மக்களையும்; மனித உரிமைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனநாயக சக்திகளையும் தங்களின் வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காகவே அமெரிக்க அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க கண்காணிப்பகம், ஆசியா கண்காணிப்பகம் என ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமை அமைப்புகளைக் கட்டி இயக்கி வருகின்றன. அத்தகைய ஏகாதிபத்திய திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஹென்றிடிபேன் நடத்தி வரும் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் சித்ரவதைக்கு எதிரான பிரச்சாரம்.அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் திணிக்கும் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் தான் உலகெங்கிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து மக்களைச் சாவின் விளிம்பில் தள்ளுகின்றன. யாரைச் சமரசமின்றி எதிர்க்க வேண்டுமோ, அவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் என்பது நண்பன் வேடத்தில் இருக்கும் துரோகி. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்; அரசியல் உணர்வைக் காயடிக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய அரசுகளின் திட்டங்களை அவர்கள் சொல்லுகிறபடியே செயல்படுத்தும் ஒரு பொம்மைதான் மக்கள் கண்காணிப்பகம்.
இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு, சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.
இவ்வாறாக மக்கள் கண்காணிப்பகம் அதன் தன்மையில் ஓர்
1] ஜனநாயக விரோத அமைப்பாகவும்இருந்து ஓர் பன்னாட்டு நிறுவனத்திற்க்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள நிலையில் அதை மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பென்று கூற முடியுமா?
2] குடும்ப ஆதிக்க நிறுவனமாகவும்
3] ஹென்றி டிபேன் ஓர் கொடிய கார்ப்பரேட் முதலாளியாகவும்
4] அதன் ஊழியர்களைக் கொத்தடிமைகளாகவும்
5] சங்கம் கட்ட அனுமதி மறுத்து உழைப்புச் சுரண்டல் உள்ள நிறுவனமாகவும்
7] பணி நீக்க சட்ட முறைகள், தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றாத நிறுவனமாகவும்
கூடுதலாக,
1] மக்கள் கண்காணிப்பகத்திற்க்கு பல நூறு கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வருகிறது?இவற்றிற்க்கு மக்கள் கண்காணிப்பகம் மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளிடம் பிச்சையெடுத்து ஹென்றி விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக எச்சில் ஒழுக ஹென்றி டிபேனிடம் உறவு பேணும் பலரும் நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டும். [ உண்மை அறியும் குழு கூட அமைக்கலாம்!]
2] என்ன நோக்கத்திற்க்காக நிதி வழங்கப் படுகிறது?
3] மக்கள் கண்காணிப்பகம் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெறப்பட்ட நிதி எவ்வளவு? கொடுத்தது யார்? உடன்படிக்கை விபரங்கள் என்ன?
4] நிதிகள் நிறுத்தப் பட்டால் தற்போது எடுக்கப்பட்ட போராட்டங்களின் நிலை என்ன?
5]ஆயிரங்களில், லட்சங்களில் சம்பளம் பெற்று மனித உரிமைக்குப் போராட முடியுமா?
6] மக்கள் கண்காணிப்பகத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?
7] மக்கள் கண்காணிப்பகத்தோடு எந்த அடிப்படையில் தமிழ் தேசிய, திராவிட, தலித், இடதுசாரி அமைப்பினர் இணைந்து பணியாற்றுகின்றனர்?
8] வழக்கறிஞர் வல்லரசு தாக்கப்பட்ட சம்பவம்,அதையொட்டி காவல்துறை,நீதித்துறை உடனான ஹென்றியின் உறவு குறித்து மக்கள் கண்காணிப்பகம் கூறுவதென்ன? அதன் தோழமை அமைப்பினர் நிலைப்பாடென்ன?
{அல்லது}
உண்மைகளை உலகத்திற்க்கு உரத்துச் சொல்ல ஹென்றி டிபேனும்,மக்கள் கண்காணிப்பகமும் தன்னை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்? அதன் தோழமை அமைப்பினர் கூட இதற்கு முயற்சிக்கலாம்.செய்வார்களா?
www.vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக