வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஆழ்கடலில் மீன் பிடிப்பு: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

ஆழ்கடலில் மீன் பிடிக்க வடமேற்கு இலங்கை மற்றும் தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்து விட்டது.

இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இவ்வாறு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பதன் மூலம் குறுகிய பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மீனவர்களிடையே ஏற்படும் மோதல்களைத் குறைக்கலாம் என்று கூறியிருந்தார்.இதுகுறித்து வியாழக்கிழமை தனது கருத்தைத் தெரிவித்த இலங்கை மீன்பிடித் துறை அமைச்சர் ரஜித சேனரத்னா, ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால், அதனால் பயனடையப் போவது இந்திய மீனவர்கள்தான். வடமேற்கு இலங்கை மீனவர்கள் இலங்கைக்குள்ளேதான் மீன் பிடிப்பார்கள். ஆனால், இந்திய மீனவர்கள் இலங்கை நீர்ப்பரப்பில் மீன் பிடிப்பார்கள் என்றார்

கருத்துகள் இல்லை: