புதுடில்லி, இந்தியா: “ஏங்க, ராசா அதிரடியா வம்பு பண்ண தொடங்கிட்டாராமே” இந்தப் பேச்சு தற்போது தி.மு.க. வட்டாரங்களில் அடிபடுகிறது. இவர்கள் கூறும் நபர், வேறு யாருமல்ல, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான்!
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொற்படி நடக்காமல், அவர் சொந்தமாகவே காரியங்களைச் செய்யத் தொடங்கி விட்டார் என்பதே இவர்களது பேச்சின் சாராம்சம். இதென்ன புதுக் கதை என்று விசாரித்தால், சில டில்லி விவகாரங்கள் விறுவிறுப்பாக வந்து விழுகின்றன.
கனிமொழியின் ஜாமீன் மனு திங்கட்கிழமை (17-ம் தேதி) ஹியரிங்குக்கு வருகிறது. அதற்கிடையே எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தக் கூடாது என்பது கலைஞரின் அட்வைஸ் என்கிறார்கள். ஆனால், ராசாவின் சிந்தனை வேறு திசையில் செல்கிறதாம்.
தன்னை பலிக்கடா ஆக்கிவிட்டே, கனிமொழியை வெளியே கொண்டுவர திட்டம் இருப்பதாக அவர் நினைக்கிறாராம்.
கருணாநிதி அனுப்பிய நம்பிக்கைக்குரிய ஒருவர் சமீபத்தில் ராசாவை சென்று சந்தித்ததாகத் தெரிகின்றது. “அவசரப்பட வேண்டாம். டில்லியில் இருந்து சாதகமான சிக்னல் கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில், தேவையில்லாமல் (மத்திய) அரசைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்” என்று இந்தத் தூதுவர் மூலமாக ராசாவுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாம்.
ஆனால், அதைக் கேட்கும் நிலையில் இல்லை ராசா.
“இப்படியே விட்டுக் கொண்டு இருந்தால், கேஸ் இறுகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் தண்டனை உறுதியாகி விடும். அதன்பிறகு என்ன சொன்னாலும், கேஸை திருப்ப முடியாது. சுப்ரமணியம் சுவாமி, அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக போட்டுள்ள வழக்கை நாமும் எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சான்ஸை மிஸ் பண்ணினால், இதுபோல ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வராது” என்று சொல்லி அனுப்பினாராம் அவர்.
தான் வெளியே வருவதற்கு உள்ள ஒரேயொரு வழி, அமைச்சர் சிதம்பரத்தையும் பிரதமரையும் வழக்குக்கு உள்ளே இழுத்து விடுவதுதான் என்று நினைத்து அந்தப் பாதையில் செல்கிறார் ராசா என்கிறார்கள். நிலைமை தற்போது அவருக்கு சாதகமாக உள்ளதை ஆ.ராசாவுக்கு ஒளி தெரிகிறது (அமைச்சர் சிதம்பரத்தின் புண்ணியத்தில்) என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
அதில் கூறியதுபோல, மூன்றாவது நபராக பிரதமரை அழைக்குமாறு ராசா ஒரு வார்த்தை சொன்னாலே வழக்கு அதிரத் தொடங்கிவிடும்.
ராசா சொல்லி அனுப்பிய பதிலால் கலைஞர் பயங்கர அப்செட் என்கிறார்கள், கோபாலபுரத்துடன் நெருக்கமானவர்கள். ராசாவின் ‘மூன்றாவது நபர் விளையாட்டு’, கனிமொழியையும் சேர்த்து மூழ்கடித்து விடலாம் என்பது கருணாநிதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அட்வைஸ் என்கிறார்கள்.
கலைஞருக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டது, டில்லியில் இருந்து என்கிறார்கள்! “ராசாவை ஆஃப் செய்வது உங்கள் பொறுப்பு” என்றும் கூறப்பட்டுள்ளதாம். “இவ்வளவு காலம் பொறுமையாகக் காத்திருந்து விட்டார். இப்போது ஏன் திடீரென முறுகிக் கொள்கிறார்?” என்றும் கேட்கப்பட்டதாம்.
“ஆனால், ராசாதான் அடங்க மாட்டேன் என்று எகிறுகிறாரே” என்கிறார்கள் தி.மு.க. முகாமில்!
www.viruviruppu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக