புதன், 12 அக்டோபர், 2011

பிரித்தானியாவில் தாலிக்கொடிக்கு ஆபத்தாம்

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் 3 தாலிக்கொடி அறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில சம்பவங்கள் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக பவுனின் விலை முன்னெப்போதும் இல்லாது உயர்வடைந்துள்ளது. இதனை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகின்றது. பல தமிழ் பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை. கோயில் அல்லது நல்ல காரியங்களுக்குச் செல்லும்போதே அதை அணிவது வழக்கம். ஆனால் சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அவர்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும் போது கூட அதனை அணிந்தே செல்கிறார்கள். இவர்களையே தற்போது ஒரு கும்பல் குறிவைத்துள்ளது என நம்பப்படுகிறது.

தனியா வரும் தமிழ் பெண்களை இவர்கள் மிரட்டியும் மற்றும் அடித்தும் தாலிக்கொடியை அறுத்துச் செல்கிறார்கள். தமிழ்பெண்கள் வழமையாக அணியும் தாலிக்கொடியின் ஆகக்குறைந்த மதிப்பு சுமார் 3000 பவுன்சுகள் இருக்கும்.

எனவே திருடங்களுக்கும் இது போன்று திட்டமிட்டு செயல்படும் குழுக்களுக்கும் பெரும் பணம் கிடைக்கிறது. சமீபத்தில் வால்த்தம்ஸ்ரோ பகுதியில் குழந்தை ஒன்றை தள்ளுவண்டியில் தள்ளிவந்த தாய் ஒருவரை இக் கும்பல் குறிவைத்துள்ளது. திட்டமிட்ட ரீதியில் குழந்தையின் நகைகளை திருட முனைய அதனைத் தடுக்கும் நோக்கில் அவர் குனிந்தவேளை பின் புறத்தில் நின்றவர் தாயின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட போராட்டத்தில் அத் தமிழ் பெண் மீது இக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. ஈவிரக்கமற்ற வகையில் மூக்கு மற்றும் கண்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் சிந்த அப்பெண் நிலத்தில் வீழ்ந்திருக்கிறார்.

இதே போல மற்றுமொரு சம்பவம் என்பீல்ட் பகுதியில் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஆபிரிக்க நாட்டவர்கள் சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: