வெள்ளி, 14 அக்டோபர், 2011

புலி அங்கத்தினரது மறுவாழ்வு,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஒரு பெரிய வெற்றி

ampe-1முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி அங்கத்தினரது மறுவாழ்வு,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஒரு பெரிய வெற்றி  (பகுதி 1)
-   ராணி விஜேபால
(புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம்: மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு)
Rehablitationஎல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக நடைபெற்ற   மனிதாபிமான நடவடிக்கைகள் நடந்து முடிந்து கிட்டத்தட்ட மூன்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்ட போதும் மோதலுக்கு பின்னான பாரிய சவால்கள் ஸ்ரீலங்காவில் இன்னமும் மீதமிருக்கின்றன. இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதும் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளித்து அவர்களைச் சமூகத்துடன் மீள் ஒருங்கிணைப்பு செய்வதுமே இவற்றுள் முன்னுரிமை வழங்கப்பட்டு நிறைவேற்றப் படவேண்டிய நடவடிக்கைகளாகவுள்ளன.
சர்வதேச சமூகம் ஸ்ரீலங்காமீது தவறுகள் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தபோதும் அரசாங்கம் இந்தச் சவால்களை மிகத் திறமையாக எதிர்கொண்டது. இந்த சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அநேகமாக இடம் பெயர்ந்த சகல பொதுமக்களையும் அவர்களது கிராமங்களில் மீளக் குடியேற்றுதலை நிறைவு செய்து அனைத்து நலன்புரி நியைங்களையும் மூடியதன் மூலம் ஸ்ரீலங்கா முழு சர்வதேச சமூகத்துக்கும் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
அதே மூச்சுடன் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் மீள் ஒருங்கிணைக்கும் பணியினையும் அது திறமையாகக் கையாண்டது. 1800 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் செயற்படும் பலவிதமான மறுவாழ்வு நிலையங்களிலும் அதிகபட்சம் இரண்டுவருடங்களுக்கு குறையாத புனர்வாழ்வுப் பயிற்சியினை அளித்து அவர்களை சமூகத்துடன் மீள் ஒருங்கிணைத்துள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவிடமிருந்து அந்தப் பதவியை தற்போது கையேற்று புதிய புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள சந்தன ராஜகுரு சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய நேர்காணலில் : புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைப்பற்றி, அவர்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவோ மற்றும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவோ தங்களுக்கு இதுவரை எதுவித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறாததால், இந்த போராளிகளின் ஒட்டுமொத்த மறுவாழ்வு நடவடிக்கைகளுமே ஒரு வெற்றி என்று பெருமிதப் பட்டார்.
“இந்த முன்னாள் புலிகளுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக அரசாங்கம் இதுவரை 1.3 பில்லியன் ரூபா வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபடியால் நாங்கள் மாதமொன்றுக்கு 150 மில்லியன் ருபா வரை செலவு செய்தோம். இப்போது அது மாதம் 50 மில்லியன் ஆகக் குறைந்து விட்டது. இந்தப் பணம் அரசாங்கத்தினால் வாரியிறைக்கப்பட்டு அரசாங்கத்தினால் அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுருவுடன் சண்டே ஒப்சேவர் நடத்திய நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்:
  • கேள்வி: மே 2009ல் மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்நோக்க வேண்டியிருந்த சவால்களில் ஒன்றாகவிருந்தது போரின் இறுதிக் கட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததாகக் காணப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு நடவடிக்கை. புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தால் எவ்வாறு இந்தச் சவால் எடுத்துக் கொள்ளப்பட்டது மற்றும் இந்த நடவடிக்கைக்கு உதவுவதற்காக என்ன பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டன?
பதில்: புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகத்தின் பணியகம் புதிதான ஒன்றல்ல. அது 1990 களிலேயே ஜேவிபி கிளர்ச்சியாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக அப்போதே உருவாக்கப் பட்டிருந்தது. எனவே ஏற்கனவே எங்களிடம் ஒரு அமைப்பு இருந்தது. ஆனால் ஜேவிபி அங்கத்தினர்கள் வெளியேற்றப்பட்டதும் அது கலைந்து போய்விட்டது, மற்றும் அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. 1995 மற்றும் 1996 களில் பாதுகாப்பு சேவையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதும், சிறையில் அடைக்கத் தக்க அளவுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் பெருமளவு ஈடுபடாத சரணடைந்த ஏராளமானவர்களும் மற்றும் கைது செய்யப்பட்டவர்களும் இருந்ததினால் திரும்பவும் அதற்கு அவசியம் ஏற்பட்டது.
அவர்களுக்கு புனர்வாழ்வு ஒரு சிறந்த தீர்வாக இருந்தது. அந்த நோக்கத்துக்காக ஒரு மறுவாழ்வு நிலையம் யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 51ம் பிரிவின் கட்டளைத் தளபதியாகவிருந்த ஜெனரல் லயனல் பலாகல்லவுக்கு கீழ் ஒரு அதிகாரியாக நானும் அதில் தொடர்பு கொண்டிருந்தேன். எனவே பொறிமுறை ஏற்கனவே இருந்து வந்தது. மற்றும் நீதிமன்ற அதிகாரமும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு சிறைத் தண்டனை வழங்காமல் மறுவாழ்வு வழங்க ஆணையிட்டு எங்களிடம் ஒப்படைத்தது.
மனிதாபிமான நடவடிக்கை
2006ல் மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டதும் இந்த நிலையம் நீதியமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது, மற்றும் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் இந்த சரணடைபவர்களைக் கையாள்வது தொடர்பாக செப்டம்பர் 2006ல் பிரசுரிக்கப் பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தல் தெளிவாகத் தெரிவிப்பது, சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட எந்த ஒரு நபரும் மறுவாழ்வு அளிப்பதற்காக வழிகாட்டப்படவேண்டும் என்று.
எனவே இதன் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானோர் யுத்த மனநிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளமுடியாத பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அவர்களை வித்தியாசப்படுத்தியதுடன் அவர்கள் புனர்வாழ்வு பெறுவதையும் விரும்பினார்கள்.
ஆகவே எங்களிடம் இந்த மாதிரிவடிவ ஏற்பாடு அந்த நேரத்தில் கைவசம் இருந்தது. 2009ல் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்த உடனேயே நூற்றுக் கணக்கிலும், ஆயிரக் கணக்கிலும் மக்கள் உள்ளே வந்தார்கள். எனவே அதில் எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு சரணடைவதற்கான ஒரு தெரிவு கிடைத்தது. எல்.ரீ.ரீ.ஈ யுடன் சிறிதளவான தொடர்பு கொண்டவர்களையும்கூட சரணடையுமாறு கேட்கப்பட்டது. அதனால் சுமார் 12.000 வரையிலானவர்கள் தாமாக முன்வந்து சரணடைந்தார்கள். அவர்கள் தனியாக தங்கவைக்கப் பட்டார்கள்.
இப்படித்தான் அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள் மற்றும் எங்களிடம் அதற்கான கரு இருந்தது. எனவே இது அதைச் செய்வதற்கு ஏற்ற ஒரு விடயமாக அமைந்தது, மற்றும் அவர்களை எங்கே தங்கவைப்பது என்ன செய்வது போன்ற விடயங்களை கடந்து போன வருடங்களில் செய்து முடித்து எங்களால் சமாளிக்க முடிந்தது.
  • கேள்வி: நீங்கள் புனர்வாழ்வு கொடுப்பதற்காக அழைத்து வந்துள்ளவர்கள் உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள். அவர்களிடையே தற்கொலைத் தாக்குதல் மற்றும் பலவிதமான பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்பட்ட அங்கத்தவர்களும் இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையங்களில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள்.
பதில்: அவர்கள் வந்தவுடன் ஆரம்பத்தில் நாங்கள் அவர்களை 24 நிலையங்களில் தங்க வைத்திருந்தோம். அந்த இடைக்காலத்தில் நாங்கள் அவர்களின சுயவிபரங்களையும் மற்றும் அவர்களைப்பற்றிய குறிப்புகளையும் எடுக்க ஆரம்பித்தோம். அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈயுடன் இருந்த தொடர்பு போன்ற விடயங்களில் நாங்கள் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. அது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால்(ரி.ஐ.டி) மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்கள் உத்தியோகத்தர்களை அனுப்பி எல்.ரீ.ரீ.ஈயுடன் சிறிதளவு தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் உட்பட அனைவரையும் நேர்காணல் செய்தார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ யில் மிகவும் அதிகளவு ஈடுபாட்டுடன் செயற்பட்டவாகளில் தாமாக முன்வந்து சரணடைந்தவர்கள். தாங்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக செயற்பட்டதால் தங்களைப் பற்றிய விபரங்களை மற்றவர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்களோ என அஞ்சினார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் அவர்களைத் தரம் பிரித்தோம். எல்.ரீ.ரீ.ஈ யில் முற்றாக ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் பூசாவுக்கு மாற்றப்பட்டார்கள். அப்படியான நபர்கள் கணிசமான அளவு இருந்தார்கள்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் தரம் பிரிக்கப்பட்டு அவர்களில் ஏ,பி,சீ தரத்திலுள்ளவர்கள் முறையே எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள், கடுமையாகப் பின்தொடர்ந்தவர்கள் மற்றும் பொருட்களைக் கண்டு பிடிக்கவும் மற்றவர்களைக் கைது செய்யவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள்  ஆகிய தரத்தினரை தங்களுடன் கூட்டிச் சென்றார்கள்.
தரம் டி, ஈ,மற்றும் எப் தரத்தைச் சேர்ந்தவர்கள் முறையே அரசியல் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கு தங்கள் பணியினை வழங்கியவர்கள் ஆவர்.
அது நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் பிற்பாடு எல்.ரீ.ரீ.ஈ யினரைக் கைது செய்வதில் மக்கள் அதிக ஈடுபாடு காட்டலாயினர். 2006ம் ஆண்டு சட்டவிதிகளின்படி புனர்வாழ்வுக்கான குறைந்தபட்ச காலம் ஒரு வருடம் ஆகும். அது மூன்று மாத தவணைகளில் நான்கு தடவைகள்;, அதாவது மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்க முடியும். இதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தைக் கொண்டு செய்ய முடியும்.
சில குறிப்பிட்ட நபர்கள் இன்னும் சரியாகத் திருந்தி வரவில்லை அதனால் அவர்களை இன்னும் சிறிது காலத்துக்கு வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் உணரும் பட்சத்தில், பாதுகாப்பு அமைச்சின்  அனுமதியோடு நாங்கள் அவர்களை மேலும் சிறிது காலத்துக்கு வைத்திருப்போம். அதனால்தான் ஒரு வருடம் கட்டாயமானது,மற்றும் நான்கு தடவைகள் மூன்றுமாதத் தவணைகளான நீடிப்பாக மேலும் ஒரு வருடம். எனவே அவர்களை நாங்கள் வைத்திருக்கக் கூடிய அதிகபட்ச காலம் இரண்டு வருடங்கள் மட்டுமே.
துப்பாக்கிக் கலாச்சாரம்
  • கேள்வி: நீங்கள் மறுவாழ்வு அளிக்க வேண்டியிருப்பது துப்பாக்கிக் கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டு வருடக் கணக்காக துப்பாக்கிகளை தங்கள் கரங்களில் பிடித்துக் கொண்டிருந்தவர்களை. அவர்களுக்கு எப்படி நீங்கள் புனர் வாழ்வளித்தீர்கள் அத்தோடு புனர்வாழ்வுக் காலத்தில் அவர்களின் மனங்களை எப்படி மாற்றினீர்கள்?
பதில்: அது அடிப்படையில் இங்குள்ள பெரும்பாலான என்.சீ.சீ எனும் தேசிய மாணவர் படை அங்கத்தவர்களைக் கொண்ட உத்தியோகத்தர்களின் பணியாகும். இங்கு ஓரளவு இராணுவத்தினரும் மற்றும் அதிகாரிகளும் கூட உள்ளனர். என்.சீ.சீ அங்கத்தவர்கள் மாணவர்களைக் கையாளும் பயிற்சியினைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த முன்னாள் போராளிகளிடத்தில் வெகு கனிவுடன் நடந்து கொண்டனர். நாங்கள் அவர்களை ஒருபோதும் கடுமையான விதத்தில் நடத்தியது கிடையாது. அடிப்படையில் நாங்கள் அவர்களிடத்தில் நன்றாகவே நடந்து கொண்டோம்.
நாங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கை முறையில் ஒரு வழமையைRehabilitation2 பின்பற்ற வைத்தோம். அவர்கள் பல வகையிலும் மறுவாழ்வுக்குத் தயார் படுத்தப் பட்டனர். அதில் ஒரு பகுதி அவர்களை ஈடுபடுத்தி வைத்துக் கொள்;ளும் தொழிற் பயிற்சியாகும். நாங்கள் அவர்களுக்குத் தேவையான கல்வியிலும் மறுவாழ்வளித்தோம் விசேடமாக சிறுவர் போராளிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிறுவர் போராளிகள் இரத்மலானையில் உள்ள இந்துக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு தங்கள் கல்வியினைப் பெற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயில் சிறுவர் போராளிகளாக இருந்த போதிலும் அவர்கள் எங்களிடத்தில் வரும்போது 16 வயது போன்ற பிராயத்திலிருந்தார்கள். அவர்களில் சிலரே பாடசாலைகளுக்குச் செல்லக் கூடியவர்களாகவிருந்தார்கள். அங்கிருந்த 12,000 பேரில் 594 பேர்கள் சிறுவர்கள் ஆவர். அவர்களில் 273 பேர் பாடசாலைகளுக்கு அனுப்பப் பட்டார்கள் மற்றும் மிகுதி 321 பேரும் தொழிற் பயிற்சி நெறிகளுக்கு அனுப்பப் பட்டார்கள்.
சில காலத்துக்கு முன் அவர்கள் தங்கள் கல்வியினை முடித்துக் கொண்டு தங்கள் பெற்றோரிடம் அல்லது பாதுகாவலரிடம் செல்வதற்காக விடுவிக்கப் பட்டார்கள். வயதானவர்களில் தங்கள் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றத் தவறியவர்களுக்கு தங்கள் கல்வியினைத் தொடர ஒரு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான வசதிகள் வழங்கப் பட்டன. அவர்கள் ஓரளவு திறமையாக அதில் வெற்றியீட்டியுமுள்ளார்கள். அது கல்வி சம்பந்தமான மறுவாழ்வு. அதே நேரம் நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களை அவர்களுக்கு விரிவுரைகள் நடத்துவதற்கும் மற்றும் பல்வேறு வகையான தியான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அவர்களிடம் செல்வதற்கான வழிகளைப் பயன்படுத்திக் கொண்டோம். அது ஆன்மீக வழியிலான மறுவாழ்வு நடவடிக்கை.
அதே நேரம் அவர்களில் சிலர் வரைதல், கைவேலை, நாடகம், மற்றும் கலைகளை நடத்துவதில் வல்லுனர்களாக இருப்பதைக் கண்டோம். அவர்கள் கலைகள் மற்றும் உருவாக்க நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டர்கள். அதேவேளை அவர்கள் மறுவாழ்வு நிலையங்களில் இருந்தாலும், அவர்களின்; தாய் தந்தையர், துணைவியர், மற்றும் குழந்தைகள் அவர்களிடம் வருகை தர அனுமதிக்கப் பட்டார்கள். அந்த வெளிப்பாடு அவர்கள் தடுப்புக் காவலில் இருக்கவில்லை என்கிற உணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களில் பங்கெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. வவுனியா புனர் வாழ்வு நியைத்திலிருந்து அவர்கள் பல சிறந்த விiயாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளார்கள், அவர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்த பொழுது ஒரு உதைபந்தாட்டப் போட்டியில் ஹொல்சிம் போன்ற ஒரு கழகத்தைக் கூட ஏழுக்குப் பூச்சியம் என்கிற  கோல் கணக்கில் தோற்கடிக்கும் திறமை பெற்றிருந்தார்கள். இப்படியான முறைகளைத்தான் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்காக நாங்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்தோம்.
  • கேள்வி: விசேட நிலையங்களில் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பது ஒரு இலகுவான பணி. ஆனால் சமூகத்துடன் அவர்களை மீள் இணைப்பது எப்படியாயினும் கடினமான ஒன்று. அவர்களைச் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னர் அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏராளமான நம்பிக்கை தேவைப் படுகிறது.எந்த வகையான பொறிமுறைகளை இந்த நடைமுறைகளுக்காக நீங்கள் பின் பற்றுகிறீர்கள்?
பதில்: நீங்கள் வெகு சரியாகச் சொன்னீர்கள். நிலையங்களில் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பது சரிதான். அவர்கள் சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கப் படும்போதுதான் பிரச்சினை எழுகிறது. சமூகம் அவர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதனை நாங்கள் பாhக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது பணியகம் அமைச்சின் உதவியுடனும் மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பின்(ஐ.ஓ.எம்) உதவியுடனும் சகல மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தினோம். அரசாங்க அதிபரின் ஆதரவுடன் நாங்கள் மதத் தலைவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூகத்தின் பல தரப்பட்டவர்களையும் ஒன்று திரட்டி அவர்கள் எப்படி இந்த புனர்வாழ்வு பெற்று வருபவர்களைப் பாதுகாப்பது மற்றும் எந்த வித வெறுப்பும் இல்லாமல் அவர்களை ஏற்றுக் கொள்வது எப்படி, என்பது பற்றிய விரிவுரைகளை வழங்கினோம். இவர்கள் தவறாக வழி நடத்தப் பட்டவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய Rehabilitation4வைக்க எங்களால் இயலுமாகவிருந்தது.
அதே நேரம் இவர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளன. எனவே அவாகள் எங்கு சென்றாலும் அந்த முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். வெறுமனே அலைந்து திரிய அவர்களுக்கு நேரம் கிடைக்காது. அவர்கள் ஏற்கனவே ஒரு தொழிலைக் கற்றுள்ளார்கள் எனவே அவர்கள் விரைவாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்குமான தேவைகளை சம்பாதித்து பெற்றுக் கொள்ள முடியும். இது ஏனென்றால் இவர்கள் காரணமாகத்தான் இவர்களது குடும்பத்தினர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இல்லாமல் வாழ்க்கையை கொண்டு நடத்த அவர்களின் குடும்பங்கள் சிரமப் படுகின்றன.எனவே ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு இவர்களிடமே தங்கியுள்ளது.
மீள் ஒருங்கிணைப்பு வெற்றியையே அளித்துள்ளது. இதுவரை எந்த ஒருமீள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட நபரும் எந்தக் குற்றச் செயலுக்காகவும் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கவில்லை. வேலை இல்லாமல் இருக்கும் பொழுதுதான் எவரும் குற்றவியல் பாதைக்குத் திரும்புவார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடனும் தங்கள் தொழிலுடனும் சேருவதை நாங்கள் கண்டு வருகிறோம். அவர்கள் வாழ்க்கையில் அவ்வளவு செழிப்பாக இல்லாமலிருக்கலாம். எங்களால் அவர்களுக்கு வேலைகளை வழங்க இயலாமலிருக்கிறது, ஆனால் நாங்கள் அவர்களுக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்கியுள்ளோம்,எனவே அவர்களால் தங்கள் வாழ்க்கையை தெரிவு செய்ய முடியும்.
  • கேள்வி: அவர்களை சமூகததுடன் மீள் ஒருங்கிணைத்த பிறகு அவர்களின் செயற்பாடுகளைக் கவனிக்க உங்களிடம் ஏதாவது பொறிமுறை உள்ளதா?
பதில்: இவ்வளவு காலமும் நாங்கள் எங்கள் கவனத்தை நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட மறுவாழ்விலேயே செலுத்தியிருந்தோம்.  மற்றும் இராணுவ குடியியல் விவகார அலுவலர்கள் அவர்களுக்கான கண்காணிப்பை செய்து வந்தார்கள். இப்போது எங்களிடம் சுமார் 1,000 வரையானவர்களே மறுவாழ்வுக்காக எஞ்சியுள்ளனர். இப்போது நாங்கள் எங்கள் கவனத்தை பொருளாதார மற்றும் சமூக ஒருங்கிணைப்புகளில் திருப்ப முடியும். இதற்காக நாங்கள் ஒரு திறமையான வலையமைப்பை பெற உள்ளோம். நாங்கள் வேறு அமைப்புகளிலிருந்து சில உத்தியோகத்தர்களை இராணுவ அமைப்புகளுக்கு மாற்ற எண்ணியுள்ளோம். எனவே அவர்கள் இந்த மறுவாழ்வளிக்கப் பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கு இராணுவ குடியியல் விவகார அலுவலர்களுக்கு உதவிகளை வழங்க முடியும். அந்த வழியில் அவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப் பட்ட பின்னர் நாங்கள் அவர்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தப் போகிறோம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: