பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியிலிருந்து...
.
.
திமுக பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அன்புமணி ராமதாஸூக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறீர்களா?
என் மகனுக்கு ராஜ்யசபா சீட் என்பது ஒரு பிரச்சனையே அல்ல.
அரசியல் ஒரு வியாபாரமா என்று திமுக தலைவர்கள் கூட கேட்கிறார்களே?
அரசியல் ஒரு வியாபாரமாகத்தான் இருக்கு. வியாபாரத்தை பொறுத்தவரை லாப/நஷ்டம் என்பது சமம்.
தமிழக சட்ட மேலவைக்கான பாமகவின் ஆதரவு என்பது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் பெறுவதற்குத்தானே?
என் மகனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க வேண்டும் என்று ஆதரவு அளிக்கவில்லை. அந்த நேரத்தில் திமுக, பாமகவின் 18 எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் கேட்டது. மூன்றில் இரண்டு மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக எங்களின் தொடர்ந்து பேசிவந்தார்கள்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அன்புமணியிடம் பேசினார்.
அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து கலைஞருடனும், மு.க.ஸ்டாலினுடனும் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கேட்டு என் கட்சித்தலைவர்கள் பேசினார்கள்.
ஜி.கே.மணி தொடர்ந்து கேட்டு வந்தபோது, ‘பொருமையா இருய்யா உங்களுக்கு சீட் உண்டுய்யா’என்று சொன்னார் கலைஞர்.
இதைக்கேள்விப்பட்டதும் நான் கலைஞருக்கு போன் செய்து நன்றி சொன்னேன்.ஆனால் எங்களுக்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்கள்.
ஊழல் புகார் கூறப்பட்டுள்ள செல்வகணபதிக்கு எம்.பி. சீட் கொடுத்திருக்கிறார்கள். அன்புமணிக்கு சீட் கொடுக்காததால் காங்கிரஸ் தரப்பினரே அதிருப்தி அடைந்தார்கள். நீங்கள் கேட்டுப் பெறவேண்டியதுதானே என்று கேட்டார்கள்.
மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியா?
இப்போதைக்கு தீர்மானமாக சொல்ல முடியாது. ஜனவரிக்கு பிறகுதான் சொல்ல முடியும். கட்சியை பலப்படுத்துவதில் தான் முழுக்கவனத்தையும் செலுத்திவருகிறோம்.
அப்போ, திமுக கூட்டணிக்கும் தயாராக இருக்கிறீர்களா?
அரசியலை பொறுத்தவரை எதுவும் நடக்கும். நான் யாரையும் நிராகரிக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறதா?
திமுக ஆட்சிக்கு பெயில் மார்க் கொடுத்தேன். அதனால்தான் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இப்போது அதுமாதிரி எதுவும் கொடுக்க விரும்பவில்லை. ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதாக நினைக்கவில்லை.
கலைஞர்-ஜெயலலிதா இருவரில் யார் பெஸ்ட் என்று நினைக்கிறீர்கள்?
கலைஞரை எளிதில் சந்திக்கலாம். அவர் மீது எத்தனையோ விமர்சனங்களை வைத்துவருகிறேன். அப்படியிருந்தும் இப்போது போன் செய்தாலும் உடனே அவருடன் பேசிவிடமுடியும்.
ஆனால் ஜெயலலிதா அப்படியில்லை. ஒரு வாரம் ஆனாலும் பேசமுடியாது. கூட்டணியில் நட்பு கட்சியாக இருந்த போது கூட சந்தித்து பேச நேரம் வாங்கித்தான் சந்திக்கனும் என்கிற நிலை இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக