திங்கள், 26 ஜூலை, 2010

தங்கப்பல்லக்கில் "நித்தி,சாமியார் என்றாலஎந்த ஆசையும் இருக்க கூடாதா?

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்:
""மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்' செய்து விட்டனர்,'' என்று சாமியார் நித்யானந்தா கூறினார்
சிறையில் இருந்த போது, அங்கிருந்த மற்ற கைதிகள், என்னிடம் ஆசி பெற்றனர். அதில் ஒரு கைதி, எனக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க ஆசி கேட்டார். எனக்கே ஜாமீன் கிடைக்காமல் தான், இங்கே இருக்கிறேன், என்றேன் (சிரிப்பொலி).இருந்த போதும், அந்த பக்தரை வாழ்த்தினேன்.
ரிப்போர்ட்டர்கள் என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டனர். பல்வேறு வார பத்திரிகைகள், எனது பெயருக்கு முன்பும், பின்பும் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை வைத்தனர். சில பத்திரிகைகள் நித்யானந்தா என்ற பெயரை "நித்தி' என்று அழைத்தனர். அதற்கெல்லாம் கவலைப்பட வில்லை
மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்' செய்துவிட்டனர். போலீஸார், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஒரு வார பத்திரிகையாளர், எங்கள் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க வேண்டும் என்றார்.அப்போது சாமியார், அந்த குறிப்பிட்ட வார பத்திரிகை பெயரை சொல்லி, உங்கள் வார பத்திரிகையில், என்னை மிகவும் கீழ்தரமாக, மட்டமாக எழுதினீர்கள்.
சாமியார் என்றால் என்ன? அவனுக்கு எந்த ஆசையும் இருக்க கூடாதா? என்று கேட்டார்.
நான் செய்யாத தவறுகளை ஏன் எழுதினீர்கள். உங்கள் எடிட்டரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார். என்னை மதித்தவர்களை நான் மதிப்பேன் என்றார்
குரு பவுர்ணமி விழாவை ஒட்டி, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில் சாமியார் நித்யானந்தா இரண்டரை மணி நேரம் பவனி வந்தார். குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார்.
குரு பவுர்ணமி விழாவை முன்னிட்டு,  தியான பீடத்தில் நேற்று காலை 5 மணிக்கு சாமியார் நித்யானந்தா, வழக்கமாக நடத்தும் பஞ்ச தபசு பூஜையை நடத்தினார்.பின், தெப்பக்குளத்திலுள்ள 101 அடி உயர வைத்திய சரோவர் லிங்கத்திற்கு 100 குடம் பால், 100 குடம் சந்தனம், 100 குடம் விபூதி, 100 குடம் மஞ்சள், 100 குடம் அபிஷேக பொடி என அபிஷேகம் செய்தார். அதே நேரத்தில், தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள 1,008 லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள், "ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாயா' என்று கூறினர்.

அதையடுத்து, குளத்தில் இறங்கி குளித்தார். பின், பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடினர். பின்,  600 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஆலமரம் அருகே சென்றார். அங்கிருந்த தங்க முலாம் பூசிய பல்லக்கில் ஏறி, ஆலமரத்தை சுற்றி பவனி வந்தார். பின், ஆசிரம வளாகம் முழுவதும் பவனி வந்தார்.கூடியிருந்த பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார். சில பெண்கள் பக்தி பரவசத்தில், தன்னையும் மறந்து, நித்யானந்தா பாட்டுக்கு மயங்கியபடி பாடி, ஆடிக் கொண்டே வந்தனர்.இரண்டரை மணி நேர பல்லக்கு ஊர்வலத்திற்கு பின், சாமியாருக்கு, சிஷ்யர்கள் பாதபூஜை செய்தனர். சாமியாருக்கு பஞ்ச ஆரத்தி எடுத்தனர்.

நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து  விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் பேசினார். பின், சாமியார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்
ப.சக்திவேல் - Dharapuram,இந்தியா
2010-07-26 07:02:39 IST
காவி உடையையே 'களங்க'ப்படுத்திய 'நித்தி சாமியாரிடம் அசீர்வாதம் வாங்க...,சொற்பொழிவைக்கேட்க... இன்னும் மக்கள் கூட்டம்..இங்கே...யாருக்கும்...வெட்கமில்லை.!...
முனைவர். இரா. பெ. சீமா - பாலி,இந்தோனேசியா
2010-07-26 06:56:50 IST
இன்னும் இவனை நம்பும் மதிகெட்ட கும்பலை என்ன செய்வது? மீடியாக்கள் இல்லாதது எதையும் சொல்லிவிடவில்லை. தான் செய்தது அனைத்தும் 'ஆன்மீக ஆராய்ச்சி' என்ற பெயரில் நடத்தியவை என்றும், பெண்களுடன் ஒப்பந்தம் போட்டே, காமலீலைகளை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான். எனவே, இவனை இன்னும் குருவாக நம்பி, தங்கப் பல்லக்கில் தூக்கி, ஏன், இன்னும் கூட இவனது ஆன்மீக ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் மாக்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன செய்வது, இந்திய திருநாட்டின் தலைவிதி அப்படி? முற்றும் துறந்த துறவிக்கு, தங்கப்பல்லக்கு எதற்கு? இனி தனிமையில் இருக்கப் போவதாக அறிக்கை விட்டவனுக்கு கோடிக்கணக்கான சொத்தும், ஆசிரம சுகபோகங்களும் எதற்கு?...
hariharan - Malaysia,இந்தியா
2010-07-26 06:52:06 IST
தமிழக அரசே! மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் பல அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு பரதேசி ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகும் மக்களை முட்டாளாக்கி ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான். ஏன் அவன் மீது இன்னும் சரியான நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் ?...
மாணிக்கம் - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-26 06:40:51 IST
ஒரு பயபுள்ளையும் இன்னும் எழுந்துருக்கலயா? கருத்து சொல்ல வாங்கப்பா...
பிரகாஷ் - bangalore,இந்தியா
2010-07-26 06:39:09 IST
அடேய் நித்தி நல ஜமாய் டா...
வசந்த் - bangalore,இந்தியா
2010-07-26 06:32:03 IST
நம்பும் இல்ளிச்சவயேன் இருக்கும் வரை இவன் க்கு வாழ்வுதான் ....டேய் நித்தியானந்தா உன்னை சொல்லி குற்றம் இல்லை ..நீ பொறந்த நாடு அப்பிடி...
MANNANDHAI - India,இந்தியா
2010-07-26 06:21:03 IST
உன்னையே நீ எண்ணிப்பார்....
Aruna - Tokyo,ஜப்பான்
2010-07-26 06:12:00 IST
இவனை நிக்க வச்சி சுடனும். ஐயோ இந்தியாவே வேண்டாம். இந்தியாவில் இப்படி பட்டவனுக்கு தான் மதிப்பு. இவனெல்லாம் கடவுளாம்? இவன் மேல தப்பா? இவன் பின்னால போற மக்கள் மேல தப்பா? தயவு செய்து கெட்டவர்களை புகழும் மாதிரி செய்தியை போடாதீர்கள்....
V.Subbarao - Singapore,இந்தியா
2010-07-26 06:06:13 IST
ஒரு சந்யாசிபோல காட்சி காட்டுபவரிடம் , நமது இந்திய நாட்டில், சில அவசியமான எதிர்பார்ப்புகள் உள்ளன. கால, நேர, இட, முறை மாற்றங்களெதுவும் இதை மாற்றாது.அதிக உணவு, ஆடம்பரம், விளம்பரம், அவரை சுற்றியை இடத்தில் பெண்களிடம் புழக்கமோ தொடரபோ, பெரியபெரிய ஆச்ரமமோ இவைகளிருந்தால்- நிச்சயம் சந்தேகம் தோன்றும். அவர்கள் உண்மையாகவே உலகிற்குமுன் அவ்வாறு வாழ்ந்து காட்டினால் மட்டுமே ஒரு சன்யாசியின் வாழ்க்கைமுறை. அதிலும் அவரின் சொத்துக்கு ஏற்றாற்போல் மக்ளிடம் சந்தேகம் நிச்சயம் வரும். பல போதனை செய்பவர்க்கு இது போன்ற உண்மை தெரியாதிருக்க வாய்பில்லை....
True Indian Abu Dhabi - abudhabi,இந்தியா
2010-07-26 05:37:25 IST
எதை நம்புவது எதை நம்பாதிருப்பது. ஒன்றுமே புரியவில்லை.உண்மை சீக்கிரம் வெளிவந்தால் எங்களுக்கு தலை காயாது.Jai Hind...
prabhaakran - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-26 04:58:12 IST
ஹலோ , இது மாதிரி தானே எப்பவுமே எல்லாத்தையுமே ரீலீஸ் பண்ணிட்டு இப்படி கதைய கொடுபிங்க. இது தான் நமக்கு சகஜமாச்சே. நம்ம தல சங்கராச்சாரியாரும் இப்படித்தானே எஸ்கேப் ஆனாரு...ரைட்டு அடுத்து வேற எவனாவது சிக்குவான் பாப்ப்போம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,...
ghanamathan - kumasi,கானா
2010-07-26 04:46:36 IST
இன்னுமாட இந்த பன்னாடை பயலை நம்புறீங்க.ஏன்மா மாளவிகா சாமியார் உனக்கு ஆப்பில் கொடுத்தானா அல்லது அல்வா கொடுத்தானா?...
மீராஷா - london,உருகுவே
2010-07-26 03:53:37 IST
இவன் அடங்க மாட்டான். இவனை வெளியில விட்டது தப்பு. நல்ல நாடுயா நம்ம நாடு. ஆனால் நிச்சையம் நாம் திருந்த போவது இல்லை. சபாஷ் கண்ணா நித்தி நீ நடத்து உன் காம லீலையை வாழ்க உன் காம தொண்டு ஏமாத்து இந்திய மக்களை....
Kim - Korea,இந்தியா
2010-07-26 03:53:36 IST
மாளவிகா கணவர் பாவம் !! விரைவில் எதிர் பாருங்கள் அடுத்த CD !! இன்னுமா இந்த அயோக்கியன் பின்னால் மக்கள் கூட்டம் ! நித்தி அதிக பெண் பக்தர்களுக்கு சாக்லட் ஆப்பில் பிரசாதம் வழங்கினார் !பெண்கள் பக்தி பரவசத்தில் ஆட்டினார்!!...
விஜய் வதனி - LagosApapaTincanIslandportcomplex,நிய்யூ
2010-07-26 03:51:25 IST
இந்த நித்தி இன்னும் என்ன என்ன பிளான் போட்டு வச்சிருக்கானோ தெரியலியே? ஆனா ஒன்னு எதிர்காலத்துல நிறைய c d எதிர்பார்க்கலாம். நம்ம மாளவிகா மேடத்துக்கு புருஷன் என்ன ......யனா? இப்போ ஆப்பிள் கொடுத்தானாம்!!! அடுத்தது என்ன வாழை பழமா? அது சரி அவங்க மட்டுமா போறாங்க? பாவம்யா அவன் எத்தன பேருக்குதான் பழம் கொடுப்பான்? என்ஜாய் டி மாப்பு! பொண்டாட்டிய பறிகொடுத்த எவனாவது (மானமுள்ள) ஒருத்தன் மைனர் குஞ்ச போட்டு தள்ளிடுவாண்டி!!!!...
Vasan - chenn,இந்தியா
2010-07-26 03:34:31 IST
..நித்தி பற்றி இனிமேல் தவறாக பேசாதேங்கபா..நலவரு வல்லவரு ..என்ன....கொஞ்சம் சபலம் ..புத்தி வந்திருக்கும் ..இப்போ ..கதவு ஜன்னல் ..எல்லாம் மூடியிருக்கா...பாத்துப்பா..மறுபடியும் படம்' எடுத்துரபோறான்..Vasan...
கிருபா - Nigeria,இந்தியா
2010-07-26 03:17:05 IST
ஐயோ ஐயோ...
சுரேன் - TN,இந்தியா
2010-07-26 03:06:49 IST
Dinamalar, can you please stop this nonsense publicity to criminal....
செந்தில் - Hyderabad,இந்தியா
2010-07-26 02:43:14 IST
ஒண்ணுமே புரியல...என்ன நடக்குது எங்க....வெளிய இவரு பேரு சொன்னா தப்பா நினைக்குறாங்க...ஆனா இங்க பல்லக்குல பவனி வர்றாரு...ப்ளீஸ் கிளியர் த மேட்டர்...பாவம் இந்த மனுஷன் papaera வச்சு ஜட்ஜ் பண்ணுறான்...
kannan - riyadh,இந்தியா
2010-07-26 02:39:37 IST
criminal aquest and foolish peoples...
விவசாயி குமரன் - வயலில்இருந்து,இந்தியா
2010-07-26 02:33:52 IST
எதுவும் நடக்கலாம். இவங்க எல்லோருமே நோகாம நோம்பி கும்பிடுரவங்க. தயவு செய்து இவனுகள ஆதரிகிரவங்களையும் சரி , எதிர்கிரவங்களையும் சரி நம்பாதீங்க.. நாம சேத்துல இறங்கி வேலை செஞ்சல்தான் நல்ல சோறு கிடைக்கும் . ஆனா இவங்க அப்படி இல்ல... குடம் குடமா பாலும், சந்தனமும் .....கேட்கவே முடியல ....ஒரு லிட்டர் பால் கிடைகிரதுக்கு மாடும் மாட்டுகாரன் படுற கஷ்டமும் அந்த ஒரு லிட்டர் பால் கிடைக்காத குழந்தைகளும் ஒரு நிமிடம் கண்முன்னே வந்து கதறினார்கள் ... இவங்கள யாரும் தண்டிக்க மாட்டாங்க ... எல்லாம் காரணமாத்தான் ... மாட்டிவுடுறதும் , காப்பாதுறதும் எல்லாம் ஒரு விளையாட்டு அல்லது வியாபாரம் ... தங்க பல்லக்குல போனாலும் , தங்கத்தையே கரைச்சு பூசிகிட்டலும் கடைசில நாராம போகமாடணுக ..இது சத்தியம் அல்லது இயற்கை. இவளவு பேசுறதுனால என்னையும் நம்பாதீங்க ... விவசாயி அப்படினு பேரு வச்சுகிட்டு கம்ப்யூட்டர் ல கமெண்ட் எழுதுறது நம்புகிரமதிரிய இருக்கு ? ..சரி உண்மையா சொல்லிடுறேன் .. நான் ஒருகாலத்துல விவசாயம் பார்த்தவன் .. இப்ப பொட்டிதட்டுற வேலை ... ஆனா விவசாயத்துக்கு சீக்கிரமே போய்டுவேன் ... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அதுதான் சுதந்திரமான , சுத்தமான , நிம்மதியான வாழ்க்கை ......
முகமூடி - Bangalore,இந்தியா
2010-07-26 02:11:26 IST
இன்னுமா இந்த உலகம் இவரை நம்புது...!!!...
பெரியார் - Chennai,இந்தியா
2010-07-26 01:52:05 IST
This incident clearly shows People will never think wise, still blindly following a person who hid himself from Police,arrested from an unknow place. Dont believe wat he says, just think , think and think It's high time to get away from these people and travel in good direction for the upliftment of NATION !! Jaihind !!...
சந்துரு - dubai,யூ.எஸ்.ஏ
2010-07-26 01:48:32 IST
முடியல............ சாமி!........
2010-07-26 01:31:49 IST
இந்தா பாருங்கையா திரும்பவும் நம்ம நித்தி ஆரம்பிச்சுட்டான், சன், நக்கீரன் ஆகியோர் பட்ட பாடு எல்லாம் வீணாக ஆகிவிட்டதே, இதை பார்க்கும் அரசியல்வாதிக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நல்ல துணிவு வந்து விடும், ஊழல் செய்வதற்கும், அவர்களுக்கு வேண்டிய அளவுக்கு ஊதியத்தை உயர்த்திகொள்ளவும். ஏனென்றால் மக்கள் தான்,மன்னிக்கவும் மடையர்கள் தான் அனைத்தயும் சிறிது காலத்தில் மறந்து விடுகிறார்களே, ஏய் மடையர்களே விழித்துகொல்லுங்கள், இல்லையென்றால் நீங்களும், உங்களுடன் சேர்ந்து அப்பாவி மக்களும் அழிவது நிச்சயம், அது வெகு தூரத்தில் இல்லை,...
சிவசங்கரன் - doha,ரீயூனியன்
2010-07-26 01:06:09 IST

கருத்துகள் இல்லை: