வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பை நடத்திவருவதாக வவுனியா பொலீஸார் தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவரிடம் பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் பரபரப்பையும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியமையால் இன்று வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதுசெவ்வாய், 27 ஜூலை, 2010
வவுனியாவில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு
வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பை நடத்திவருவதாக வவுனியா பொலீஸார் தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவரிடம் பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் பரபரப்பையும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியமையால் இன்று வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக