ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஜெயலலிதா கூட்டம,வ.உ.சி. திடலில் ஊசி விழக்கூட இடம் இல்லாத அளவுக்கு



ஆளுங்கட்சியைப் பயமுறுத்தும் கூட்டம்.
இவ்வளவு கூட்டம் எப்படிய்யா வந்தது?'

வ.உ.சி. திடலில் ஊசி விழக்கூட இடம் இல்லாத அளவுக்கு மக்கள் தலைகள். 'இவ்வளவு கூட்டம் எப்படிய்யா வந்தது?' என்று சென்னையில் இருந்து கோப வார்த்தைகள் கொப்பளித்தபோது, 'கூடியிருந்தவங்கள்ல 30 சதவிகிதம் கட்சி சார்பில்லாத பொதுமக்கள்!' என்ற முழு உண்மையை போலீஸால்கூட மறைக்க முடியவில்லை. ஜெயலலிதா ஒரு மணி நேரம் பேசிய பேச்சுக்கு, ஒரு வார காலமாக மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
"புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே!" என்று தொடங்கி, "கருணாநிதி எவ்வளவு லஞ்சப் பணத்தைக் கொடுத்தாலும் 'அது எனக்கு வேண்டாம் என்று சொல்லும் மன உறுதியை, எனக்குக் கொடு இறைவா' என்று அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்!" என்பது வரை அடைமழையாகக் கொட்டித் தீர்த்தார் ஜெயலலிதா.
"காவிரிப் பிரச்னை குறித்து கருணாநிதி பேசாததற்குக் காரணம், அவரது குடும்பத்தினரது சொத்துக்கள் அதிக மாக பெங்களூரில்தான் இருக்கின்றன. 'கலைஞர் காப்பீட்டுத் திட்ட'த்தில் தொடர்புடைய இன்ஷுரன்ஸ் கம்பெனி கருணாநிதிக்கு 30 ஆண்டுகளாக நெருக்கமானது. போலி மருந்து தயாரிக்கும் மனிதர் பி.எம்.டபிள்யூ. காரை வாங்கி துணை முதல்வர் ஸ்டாலினின் மருமகனுக்குக் கொடுத்திருக்கிறார்!" - இப்படி ஜெயலலிதா பேசியது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மிளகாய் பஜ்ஜியாகச் சுவைத்தது. இவ்வளவையும் சொல்லிவிட்டு, "நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக்கொள்வேன். ஜனநாயக முறையில் தி.மு.க-வுக்கு வேட்டுவைக்கும் பணியை நீங்கள் பாருங்கள்" என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.
கூடிய கூட்டம் கலையவே பல மணி நேரம் ஆனது. ஜெயலலிதாவின் கோவைப் பேச்சுக்கு 'கோபப் பேச்சு' என்று கருணாநிதியே அடைமொழி கொடுத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்புதான் விழுப்புரத்தில் ஜெயலலிதாவே களம் இறங்கி ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதில் கூட்டம் அலைமோதியதைக் கண்டு உற்சாகமான ஜெ. அடுத்து திருச்சியைக் குறிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து ஜூலை 13-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால், கோவையில் செம்மொழி மாநாட்டுக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தவர், கோவையிலேயே ஆட்களைத் திரட்டி மிரட்டிக் காட்டினால் என்ன என்று அதிரடியாக முடிவெடுத்தாராம்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவருக்குமே தகவல் தெரியும். "செம்மொழி மாநாட்டுக்குக் கூடியதைவிட அதிகமாக உங்களால் கூட்ட முடியுமா?" என்று இவர்களிடம் ஜெ. கேட்க... அவர்களும் ஏதோ ஒரு தைரியத்தில் தலையாட்டி வைக்க, "முத்துசாமி, சின்னச்சாமி என எத்தனை ஆசாமிகள் போனாலும் அம்மாவையே சாமியாக நம்பும் உண்மையான பக்தர்கள் இங்கேதான் இன்னமும் இருக்கோம்!" என்று உணர்ச்சிவசப்பட்டாராம் ஒரு முன்னாள். அப்படித்தான் கூடியது கூட்டம்.
'கோவை கொண்டாட்டமானது போலவே மதுரை மலர்ச்சி ஆக வேண்டும்!' என்ற அஜெண்டாவுடன் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் மதுரைக்குக் குறிவைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 15 திருச்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அக்டோபர் மாதம் 17-ம் தேதி நெல்லையில் நடக்கவிருப்பது அநேகமாக மாநாடாக இருக்கலாம். 1998-ம் ஆண்டு நெல்லை மாநாட்டுக்குப் பிறகுதான், அதுவரை தோல்வி முடக்கத்தில்கிடந்த அ.தி.மு.க. சுறுசுறுப்படைந்தது. மத்தியில் அதிக எம்.பி-க்களுடன் அதிகாரம் செலுத்தும் கட்சியாக மாறி, அடுத்து தமிழக சட்டசபையைக் கைப்பற்றியது. எனவே, நெல்லையைத் தனக்குத் தோதான சென்டிமென்ட் இடமாக ஜெ. நினைக்கிறார்.

Comments:Anbu
"மக்கள் தலைகளோடுதான் நீந்துகிறார் ஜெ!"-> தொட்ட இடம் துலங்கி விடும் தாய்குலமே வருக.
சூரிய குடும்பம் சம்பாதித்து சம்பாதித்து அலுத்து போயுள்ளது... சம்பாதித்தத்தை அனுபவிக்க அதற்கு ஓய்வு தேவையல்லவா... கருணாநிதிக்கு நிரந்தர விடை கொடுக்க தமிழகம் தயாராகிவிட்டது என்பதையே இக்கட்டுரை காட்டுகிறது.....
Report abuse | 14 hours ago
rajeswari
இவரு டஃப் ஃபைட் கொடுக்க கொடுக்க கவர் வெயிட் கூடுமோ?
Report abuse | 14 hours ago
Sakthi
இந்தம்மா எதிர்கட்சிகளை அரவணைத்து தி.மு.க வை எதிர்த்தால்தான் உண்டு. இல்லின்னா விகடன் படிச்சுட்டு தனக்கு தானே சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.
Report abuse | 16 hours ago
Prasath
இவர் முதல்முறை ஆட்சி செய்தபோது அதிமுக ஊழலில்திளைத்து, மிக மோசமான ஆட்சி என்று பெயர் எடுத்தது. ஆனால் மீண்டும் 2001 ஆட்சி செய்தபோது எந்த ஊழல் புகாரும் இவர் மீது இல்லை ஆட்சியும் ஓரளவு நன்றாகவே இருந்தது ஆகையினால்தான் 60 சீட் வென்று இப்போது ஆட்சி செய்யும் திமுகவை மைனாரிட்டி அரசாகியது. கலைஞர் சர்க்காரிய கமிஷனை பற்றி இப்போது பேசினால் எப்படி எடுபடாதோ அதேமாதிரிதான் இவர் முதல்முறை ஆட்சியில் செய்த ஊழலை இப்போது பேசுவது. ராமதாஸ், விஜயகாந்த், காங்கிரஸ் இவர்களை நினைத்தால் ஜெயலலிதா பலமடங்கு சிறப்பானவர்தான் இதில் சந்தேகம் வேண்டாம்.
Report abuse | 17 hours ago
Sakthivelu
வாக்குகள் வாங்கியபின் எவ்வாறு நடப்பார்களோ? பல தகவல்கள் வந்து சேர்கின்றன பத்திரிகைகளில் பதிவாகின்றன.
Report abuse | 19 hours ago
sam
ஒரு விடயம், இங்கே கருத்திடுபவர்கள் பெரும்பாலானோர் ஓட்டு போடுவதில்லை. நிறைய பேர் வெளிநாட்டில் இருந்து (நான் உட்பட)கருத்து இடுகிறார்கள். பல பேர் இலங்கை தமிழ் சொந்தங்கள். ஆகவே நண்பர்களே, உங்கள் கருத்துகள் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. இது சில வருடங்களாக நான் பார்த்து உணர்ந்தது. எப்பொழுதுமே தேர்தலில் விழும் ஆளும்கட்சிக்கு எதிரான ஓட்டு வேண்டுமானால் விழலாம். ஆனால் அதுதான் பாமக. தேமுதிகன்னு பிரிஞ்சுஇருக்கே அப்புறம் என்ன...
Report abuse | 1 day ago
sriram
அம்மா சசிகலாவின் முந்தானைமுடிச்சில் இருக்கிறவரைக்கும் என்னதான் கூட்டம் மட்டும் சேர்ந்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவே.. இதே சசிகலா இல்லாத அவர் குடும்பத்தினர் இல்லாத அம்மாவாக வரட்டும் வெற்றிக்கனியும் நிச்சயம் , நல்ல ஆட்சியும் நிச்சயம் மலரும்.. ம்ஹ்ம் எங்கே...கனவு வேணா க்காணலாம்...
Report abuse | 1 day ago
Rajendran
//"கருணாநிதி எவ்வளவு லஞ்சப் பணத்தைக் கொடுத்தாலும் ''அது எனக்கு வேண்டாம் என்று சொல்லும் மன உறுதியை, எனக்குக் கொடு இறைவா'' என்று அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்!"// இதில் உள்ள எனக்கு என்பது யாருக்கோ? ஒரு வேளை ஜெ க்குத்தானோ என்னவோ?
Report abuse | 1 day ago
Vijayakumar
வாம்மா மின்னலு... "எப்படியோ கூட்டத்த கூட்டிடுறாங்க..ஆனா ஓட்ட தான் கோட்ட விட்றானுங்கக்கா"- சசிகலா.......

கருத்துகள் இல்லை: