செவ்வாய், 27 ஜூலை, 2010

சொந்த கிணற்றில் கிடைத்த சிலை: பதுக்கி வைத்ததாக இருவர் கைது


தேனியில், கிணற்றில் கிடந்த வெண்கல சிலைகளை எடுத்து, தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி சேல்ஸ் சொசைட்டி தெருவை சேர்ந்தவர்கள் சேதுக்கண்ணன் (29), தென்னரசு (40). இவர்களுக்கு சொந்தமான கிணறு தேனி சடையாள் கோவில் பகுதியில் உள்ளது. இருவரும் சேர்ந்து தங்கள் கிணற்றை தூர்வாறும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றுக்குள் இருந்து முக்கால் அடி உயரமுள்ள சரஸ்வதி சிலை, அரை அடி உயரம் உள்ள மாரியம்மன், லட்சுமி, ஆஞ்சநேயர், முருகன் சிலைகள் கிடந்தன. இது பற்றி போலீசாருக்கோ, வருவாய்த்துறைக்கோ தகவல் தராமல், தங்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜை அறையில் வைத்து விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாலகிருஷ்ணன் எஸ்.பி., சிலைகளை கைப்பற்ற போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார், சிலைகளை கைப்பற்றி சேதுக்கண்ணன், தென்னரசு ஆகியோரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: