செவ்வாய், 27 ஜூலை, 2010

தமிழகத்தை மிஞ்சுகிறது ஆந்திரா இடைத்தேர்தல் ; போஸ்ட் கார்டு போல ஆயிரம் ரூபாய் வீச்சு

ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளில் இன்று 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று அனைத்து தொகுதிகளிலும் பெரிய அளவில் வன்முறை நடக்கவில்லை என்றாலும், நேற்று வரை பல தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தபோது அரசியல் கட்சிககள் ஆளுக்கொரு பக்கம் புகார் கொடுத்து ஆங்காங்கே ஒரே பிரச்னையாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இது போன்ற தொல்லைகள் ஆந்திராவில் இல்லையாம். ஏனெனில் எல்லா கட்சி சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், திருடனோடு, திருடனாக , ஊரோடு ஒத்துவாழ் என்ற கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆந்திராவில் தெலுங்கானா மாநிலம் என அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும், தெலுங்கு தேசம், மற்றும் பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
 
இந்த 12 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இங்குள்ள பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிர்புர், மஞ்சோரியல் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர பிரதேச காங்., தலைவர் சீனிவாசன், பா.ஜ.,வை சேர்ந்த லட்சுமி நாராயணன், தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த நர்சா ரெட்டி ஆகியோர் போட்டியிடும் தொகுதியில் ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
 
இந்த தொகுதிகளில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள்தான். இவர்கள் வேலைக்கு போய் திரும்பி வந்து பார்க்கும் போது ஒவ்வொரு ஓட்டுச்சிலிப்பிலும் ஆயிரம் ரூபாய் பின் செய்யப்பட்டிருக்கிறது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு போஸ்ட் கார்டு போல வீடுகளுக்குள் போடப்பட்டிக்கிறது. இந்த விஷயம் ஆந்திரமாநிலம் கிராம பகுதிகள் முழுவதும் ஆங்காங்கே பணம் குறித்த பேச்சுதான் நடக்கிறது.


ஒளிரப்போகுது அரசியல்வாதிகளின் வாழ்வு: தமிழகத்தை விட ஆந்திராவில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் எந்த அரசியல் கட்சிகளும் புகார் தெரிவிக்கவில்லை என்பதுதான். இது போக உயர்வகை பிராந்தி, விஸ்கி , பீர் என பாட்டல்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழக பார்முலா, ஆந்திரா வித்தியாசம் என இந்தியா முழுவதும் வரும் காலத்திலும் ஒளிரப்போகுது அரசியல்வாதிகளின் வாழ்வு.

கருத்துகள் இல்லை: