ரோம்: மணக்கோலத்தில் இருந்த பெண் , தன்னை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ரோமில் இந்த பயங்கரம் நடந்துள்ளது.
இத்தாலியில் உள்ள பலோமோ நகரில் திருமணம் ஒன்று நடந்தது. மணமகன் பெயர் இக்னேசியா, மணமகள் பெயர் அனித்ரா. அங்குள்ள சர்ச்சில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன.
அதன் பிறகு, நம் ஊரில் மணமகனையும், மணமகளையும் அப்படி நில்லுங்க, இப்படி நில்லுங்க என்று புகைப்படக்காரர் நிற்க வைத்து போட்டோ எடுப்பாரே அதேபோல இந்த ஜோடியையும், கினாகரோ என்ற போட்டோகிராபர் பல்வேறு கோணங்களில் நிற்க வைத்துப் படம் எடுத்தார்.
அப்போது சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மணப்பெண் கையில் துப்பாக்கி ஒன்றைக் கொடுத்து சுடுவது போல போஸ் கொடுங்க என்று கூறி ஸ்மைல் ப்ளீஸ் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.
இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக