ஞாயிறு, 25 ஜூலை, 2010

மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார் ?ஐந்து, "வில்லன்களை' சமாளிப்பதில்தான்

ஒரு ரூபாய்க்கு அரிசி... வீட்டுக்கு வீடு கலர், "டிவி ...' விவசாயிகளுக்கு இலவச நிலம்... மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு... என வரிசையாய் நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களில், ஒவ்வொருவரின் வீட்டிலும், இவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.

ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி இல்லை. ஆளுங்கட்சியை எதிர்க்க பலமான எதிர்க்கட்சி இல்லை. எனவே, மீண்டும் தி.மு.க., ஆட்சிதான் வரும்...கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரே இப்படித்தான் தெரிவித்தனர். பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக, இவை இருந்தன. ஆனால், தேர்தல் தேதி நெருங்க, நெருங்க இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற கருத்து வேகமாய் பரவி வருகிறது.எதிர்கொள்ள ஆள் இல்லாத அளவுக்கு, பலமான கட்சியாக இருந்த தி.மு.க.,வைப் பலவீனப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான், இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பட்டியலில் ஆளுங்கட்சியை எதிராக முன்னணியில் நிற்கும் ஐந்து, "வில்லன்களை' சமாளிப்பதில்தான், மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார் என்பதற்கு பதிலாக இருக்கும்.

அ.தி.மு.க.,: தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களில், சொல்லி வைத்தார்போல் ஜெயித்து, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகளை இழுக்கும் பணியும் தீவிரமானதால், "அவ்வளவுதான் அ.தி.மு.க.,' என்ற நிலை இருந்தது. ஆனால், ஜெயலலிதா பங்கேற்ற கோவை ஆர்ப்பாட்டத்திற்கு கூடிய கூட்டமும், அவர் எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளும் ஆளுங்கட்சியை அசைத்து பார்க்க வைத்து விட்டது. கோவையை அடுத்து, திருச்சி, மதுரை, சேலம் சென்னை என, தேர்தலுக்கான களம் அமைத்து அ.தி.மு.க., இறங்கிவிட்டது.அ.தி.மு.க.,வின் இந்தஆக்ரோஷம் ஆளுங்கட்சிக்கு எதிரான முக்கிய வில்லனாகவும், முதல் வில்லனாகவும் இருக்கிறது.

மின்வெட்டு: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், மாணவர்களில் துவங்கி, பெரிய தொழிற்சலைகளை நடத்தும் தொழிலதிபர்கள் வரை பாதித்தவர்கள் பட்டியல் மிக அதிகம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஆளுங்கட்சி தோற்றால், அதற்கு மின்வெட்டுதான் காரணமாக இருக்கும் என வெளிப்படையாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அந்த நிலை இன்னும் தொடர்கிறது.முதல்வர் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்ட முடிவில் கூட, மின் வினியோகம் சீராக இன்னும் இரு ஆண்டுகள் ஆகும் என்ற உண்மையே வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுப்பது உறுதி.

இலங்கை விவகாரம்: ராஜிவ் கொலைச் சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் இலங்கை விவகாரத்தை சொல்லி ஓட்டுக்களைப் பெற முடியாது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய லோக்சபா தேர்தலும் அதற்கு உதாரணம். ஆனால், இலங்கையில் இறுதிகட்ட போர் நடத்த போதும், போர் முடிவுக்கு வந்தபின், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் ஆளுங்கட்சி தன் கடமையை செய்யவில்லை என்ற கருத்து பெரும்பான்மையினரிடத்தில் இருக்கிறது. இதோடு, இலங்கை ராணுவத்தால், மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர்வது, ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய, "வில்லனாக' குறிப்பிடலாம்.

விலைவாசி உயர்வு: கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை ஏற்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு காரணமாய் உள்ளது. மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க., இதைத் தடுக்கவில்லை என்ற கோபம் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்கும் மனநிலையில் வாக்காளர்கள் இருப்பது ஆளுங்கட்சியின் அடுத்த, "வில்லன்' என்று சொல்லலாம்.

நிர்வாக குளறுபடிகள்: பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வழங்கியது பாராட்டைப் பெற்றது. வெளிப்படையான நிர்வாகம் என்ற வெள்ளைத் துணியின் மேல், ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடி, லஞ்ச வழக்குகள், போலி மார்க்சீட் போன்ற கறை படிந்து, அரசின், "இமேஜ்' சரிவுக்கு காரணமாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, லஞ்சம், "போலி'களின் ராஜ்யம், விவசாயிகள் பிரச்னை இவற்றோடு நதி நீர் விவகாரங்களும் அரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. தேர்தல் நாள் நெருங்கும்போது, எதிர்க்கட்சிகள் இவற்றை பூதாகரமாக்கும் என்பதால், "வரும் முன் காக்க' ஆயத்தங்களை தொடங்க வேண்டிய நிலையில் உள்ளது ஆளுங்கட்சி.

singam - namakkal,இந்தியா
2010-07-25 06:41:19 IST
ஐந்து வில்லன்களில் ஒன்று கருணாநிதி ..இன்னொன்று அழகிரி ........ அசைப்பது மட்டுமில்லை ....கவிழ்த்தே விடுவார்கள் ............
ம sundaram - Thoothukudi-628008,இந்தியா
2010-07-25 06:36:13 IST
Every thing is artificial, and set up only. It is not a sustainable development in the society. Power is centralised either with the CM or Dy CM. police droped the cases according to the order of the CM. Then where is independence of law and order. There fore, it is manifested that the cases are booked as per the political boss and the money power lobby supported by the ruling party. Tuticorin MP ask for 25 % commission to accord finacial approval for construction of community centre. There are so many commissions and ommissions , provided social audit is conducted in all department by the eminent personal from all walk of life....
Fasi.S.I - Jiangmen,சீனா
2010-07-25 05:02:14 IST
தமிழ் நாட்டுக்கு இவரே ஒரு வில்லன்தான்...
ஜெயராஜ் v - chennai,இந்தியா
2010-07-25 04:54:57 IST
தினமலர் ஒஅர் அறிய பத்திரிக்கை . எல்லா விதத்திலும் சசேவை புரியும் முதல் தரமான பத்திரிக்கை என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
jayaraj - chennai,இந்தியா
2010-07-25 04:50:06 IST
ஜெயலலிதா பற்றிய கருத்தை ஆளும் கட்சி மாற்றிக்க்கொள்ளவேண்டும். முக்கியமாக விலைவாசி குறைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் இல்லையில் கஷ்டம்தான்....
2010-07-25 04:14:39 IST
ஐயா ஆறாவது வில்லன் பத்தி சொல்லவே இல்லையே? அவுங்க குடும்ப கொள்ளைகளை பத்தி சொல்லணுமே?...
Karuppiah சத்தியசீலன் - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-07-25 04:14:01 IST
அ தி மு க ஆட்சி காலங்களில்,1977 -௮௭,1991 - 96 ,2001 -2006 ,இடைத் தேர்தல்களில்,அ தி மு க வே,வெற்றி பெற்றது.தி மு க ஆட்சி காலதில்,1973 -1976 ,1989 -1991 ,அ தி மு க எதிர் கட்சியாக இருந்தும்,இடைத் தேர்தல்களில் வென்றது....
பிரபா - chennai,இந்தியா
2010-07-25 03:30:26 IST
தி.மு.க ஆட்சி முடியப் போகும் நாள் நெருங்கி விட்டது......
ரஸ்.குமார் - jubail,செனகல்
2010-07-25 03:00:39 IST
தமிழ் நாடை பயமுறுத்தும் உன் ஆட்சியையும் உன்னையும் இந்த தமிழ் நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும்...ஒருபக்கம் இலவசம் என்று மக்களை ஏமாற்றும் திட்டம். மறுபக்கம் ஈழம் என்று சொல்லியே தமிழனை கொன்று குவிக்கும் திட்டம்,,குடும்ப அரசியல் செய்து நாட்டை கொள்ளை அடிக்கும் திட்டம்....நல்ல திட்டங்கள் போடாமல் தமிழ் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் திட்டம்,,,, இத்தனை திட்டங்களும் தமிழ் நாட்டு மக்களை பயமுறுத்தும் வில்லன்கள்,,,, வில்லாதி வில்லன்,,,,,,...
செந்தில்குமார், - ஜெட்டாஹ்,சவுதிஅரேபியா,இந்தியா
2010-07-25 02:59:04 IST
நமது சிறப்பு நிருபர் கட்டுரை நன்றாக இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி... வீட்டுக்கு வீடு கலர், "டிவி ...' விவசாயிகளுக்கு இலவச நிலம்... மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு... என வரிசையாய் நலத்திட்டங்களை படித்தவர்களும் உண்மையான உழைப்பவர்கள் யாரும் வரவேற்கமாட்டார்கள். இதன் காரணம் அனைவரும் அறிந்த ஒன்றே! அதே நேரத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், அறிவியல் வளர வளர குற்றங்களும் பெருகும். இது இந்தியாவில் மட்டும்மல்ல; உலகம் முழுவதும் இந்த போலி என்ற பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. இதற்கு ஆட்சியையும் & ஆட்சியாளர்களையும் மட்டும் குறை கூறமுடியாது, இதில் பொதுமக்களாகிய நாம்தான் காரணம். பொதுமக்களாகிய வேலையில்லா பட்டதாரி தான்பட்ட இன்னல்களைமறந்து, வேலைகிடைத்தவுடன் அதிகாரியாக மாறி பொதுமக்களை துன்புறுத்தி லஞ்சம் வாங்குவதற்கு யார் காரணம்? மொத்தத்தில் நடக்கும் தவறுக்கெல்லாம் அரசியல்வாதி என்று கூறி சமூகத்தைவிட்டு விலகாமல் ஒவ்வொருவரின் பொறுப்பை, கடமையை என்று உணர்கிறோமோ.........?! அன்றுதான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வுகிடைக்கும்... நாடு வாழ, நாம் வாழ்வோம்......
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-07-25 02:44:49 IST
ஆளும் கட்சிக்கு முதல் வில்லன் ஆளும் கட்சி தான்.இவர்களுடைய ஊழலும் மக்களை பற்றிய கவலை இல்லாததும் எதையும் பணத்தால் வென்றுவிடலாம் என்ற நினைப்பும் தான் இந்த பணக்கார கட்சிக்கு வில்லன்கள்....
abu - chidambaram,இந்தியா
2010-07-25 02:26:22 IST
எங்கு தான் வெலைவாசி குறைவஅக உள்ளது. எல்லா மானிலாத்துக்கும் நான் சென்று வந்துயுள்ளான். எல்லா எடமும் இதை விட வெலைவாசி அதிகமாக இருக்கிறது. நம் தமிழ்நாடு எவளவோ மேல்.பவர் பிரச்சனி குட போய் பார்த்து வாருங்கள். இது என் கருத்து...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-25 01:40:28 IST
சிங்கம் பதுங்குவதை பார்த்து ஒரு மான் அட சிங்கம் தூங்குகிறது, நம்மை ஒன்றும் செய்யாது என்று அவ்வழியே தைரியமாக நடந்து சென்றதாம், ஆனால் சிங்கம் பாய்ந்து மானை கொன்றதாம், அந்த மான் சாவும் நிலையில் இருக்கும் போது நினைத்தாம், சிங்கத்தின் குனாவதிசயங்கள் நமக்கு தெரிந்தும் ஒரு நிமிடத்தில் அதை அலட்சிய படுத்திவிட்டு சென்றதால் எனக்கு இந்த சாவு, என்று கண்ணீர் மல்க இறந்து போனதாம், அது போல தான் இத்தனை நாள் அதிமுக பதுங்கியது, பாய்வதற்காக, இதை அறியாத முட்டாள் திமுக என்ற மான், இது தூங்குது என்று சீண்டி பார்த்தனர், ஆனால் கோவை மாநாட்டில் பாய்ந்த போது தான் தெரிந்தது, இத்தனை நாள் இது தூங்கவில்லை, பதுங்கியது பாய்வதற்கு என்று, இப்போது வருந்துகிறார்கள் திமுகவினர். பாயாத வரைக்கும் உங்களுக்கு கொண்டாட்டம், நாங்கள் பாய்ந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். கோவைல தான் திமுகவுக்கு சனி ஆரம்பம், 32 மாவட்டத்திலும் மாநாடு போட்டு உங்கள் இமேஜ் காலி செய்வதே எங்கள் முதல் வேலை. ஏற்கனவே கோவையில் ஒரு வருடமாக நீங்கள் செம்மொழி மாநாடு என்ற பெயரில் சேர்த்து வாய்த்த இமேஜ் காலி. அடுத்து திருச்சியில் காலி, அடுத்து சேலம், அடுத்து சென்னை, அடுத்து மதுரை, அடுத்து நெல்லை, அப்படியே எல்லா மாவட்டங்களிலும் படி படியாக காலியாகும். காலியாகும் இமேஜை தூக்கி நிறுத்தவே பத்து வருடங்களாவது ஆகும், அதற்குள் திமுக தானாகவே உடைந்து அழிந்துவிடும்....
செந்தில் - India,இந்தியா
2010-07-25 01:24:49 IST
மூன்று மாதத்திற்கு முன் தமிழக அரசால் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளவர் இப்போது மூதாட்டி போட்ட ஒரு கூட்டத்தால் ஏன் மனம் மாற வேண்டும்? மின்வெட்டில் அப்போதும் இப்போதும் உள்ளது இதனாலும் மனம் மாற வாய்ப்பில்லை! எப்போதும் இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து தமிழக மக்கள் தங்கள் ஓட்டு போடும் முடிவை மாற்ற வாய்ப்பில்லை! பக்கத்துக்கு மாநிலம்,இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுதும் ஏற்பட்ட பொருளாதார சரிவு,விலைவாசி உயர்வு அதே சமயம் சம்பள உயர்வு பற்றி இப்போது எல்லா மக்களும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்! கடந்த பல ஆண்டுகால செயல்பட்ட பல "போலிகளை" இந்த ஆட்சிதான் இனம் கண்டு அழித்து வருகிறது. ஆகவே ஒரு வில்லன் கூட உருப்படியில்லை என்பது என் கருது! வாழ்க தி.மு.க, வளர்க அதன் புகழ்....
ஜெயப்ரகாஷ் - Chennai,இந்தியா
2010-07-25 01:18:39 IST
அடுத்த ஆட்சி அம்மா தான்...மாற்றமே இல்லை......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-25 00:44:17 IST
தொடர்ந்து நடைபெற்று வரும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள், இலவச பொருட்கள் வினியோகத்தில் நடைபெற்ற குளறுபடிகள், ஸ்பெக்ட்ரம் போன்ற மெகா ஊழல்கள், 1991-1996ல் ஜெ. செய்ததை போன்ற ஆடம்பர செலவுகள் போன்றவைகளும் ஆளும்கட்சிக்கு வில்லன்கள் தான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் அனைவருமே கொள்கைக்காகவோ அல்லது இந்த ஆட்சியின் மீது அபிமானத்தின் காரணமாகவோ வந்தவர்கள் அல்ல வெறும் பதவிக்காகத் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அந்த பகுதியிலுள்ள உடன்பிறப்புகளே உள்ளடி வேலைகளில் ஈடுபடுவர். மேலும் கடந்த தேர்தலில் விஜயகாந்த் ஓட்டுகளை பிரித்து பெரும் உதவி செய்தார். ஆனால் இந்த தேர்தலிலும் அவர் பண்ருட்டி பேச்சினை கேட்டு தனித்து நின்றால் அது தற்கொலைக்கு சமம் தான். எனவே விஜயகாந்தும் திமுகவுக்கு உதவ மாட்டார். எனவே இந்த தேர்தல் திமுகவுக்கு மிகப் பெரிய ஒரு சவால் தான்....
கோபி - Tiruchirappalli,இந்தியா
2010-07-25 00:43:27 IST
எது எப்படியோ விலைவாசி உயர்வு தயிர் சாதம் வரைக்கும் வந்துருச்சு. இப்போ சென்னையில் சாதாரண உணவகத்தில் கூட தயிர் சாதம் விலை Rs 65 /-....

கருத்துகள் இல்லை: