சனி, 31 ஜூலை, 2010

புலிகளின் முன்னாள் போராளிகளில் அதிகமானோர் சாரதிகளாக பணியாற்ற விருப்பம்

தமீழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மத்தியில் நடத்திய ஆய்வின் போது பலர் சாரதியாக விருப்பம் தெரிவிப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகோடியர் சுதந்த ரனசிங்க தெரிவித்தார்.

புலிகளின் முன்னாள் போராளிகள் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பின் போது புது வாழ்க்கை அமையும் பட்சத்தில் சாரதியாக வேண்டும் என 941 பேர்  விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 20 பேர் உளவியலாளர்களாகவும் எட்டுப் பேர் கணக்காளர்களாகவும் 51 பேர் சிகை அலங்கரிப்பாளர்களாகவும் இரண்டு பேர் பேக்கரி இயக்குனர்களாகவும் 50 பேர் அழகுக்கலைஞர்களாகவும், 262 பேர் தொழிலாளிகளாகவும் 280 பேர் தச்சர்களாகவும் 48 பேர் நகை வடிவமைப்பாளர்களாகவும் 222 பேர் கணினி இயக்குனர்களாகவும் தொழில் புரிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் 252 பேர் தையற்காரர்களாகவும், 107 பேர் ஆசிரியர்களாகவும் 14 பேர் தொழிலாளிகளாகவும் வாழ்கை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போரளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதன் இறுதியில் பொருளாதர பாதுகாப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது இவர்களுக்கான உளவியல் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராளிகளில் பெரும்பாலனேர் இந்துக்கள். அவர்கள் சமயப்பற்று கொண்டவர்களாக உள்ளனர். அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீன் மற்றும் மாமிசம் உண்பதை தவிர்த்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார். 

ஏற்கனவே 100 புலிகளின் முன்னாள் போரளிகளுக்கு பயிற்சியளித்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் வடபகுதி அரச போக்குவரத்து வண்டிகளில் சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

முன்னர் இவர்களில் 155 பேர் சமையற்காரர்களாகவும் 585 பேர் சாரதிகளாகவும் 122 மோட்டார் திருத்துனர்களாகவும் 401 பேர் தாதியர்களாகவும் 48 அழகுக்கலைஞர்களாகவும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
www.thenee.com 

கருத்துகள் இல்லை: