புதன், 28 ஜூலை, 2010

பாகிஸ்தானில் விமான விபத்து : 100 பேர் பலி : துருக்கியில் இருந்து வந்த

இஸ்லாமாபாத்:  துருக்கியில் இருந்து வந்த விமானம் ஒன்று மந்தமான வானில‌ை காரணமாக விபத்தில் சிக்கியது. மலைப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் சி்க்கி 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 45 பேர் விபத்தில் இருந்து உயிருடன் தப்பினர். சிலர் காயத்துடன் மலைப்பகுதியில் உதவியை நாடி நிற்கின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

146  பயணிகள், 6 ஊழியர்கள் உள்பட 152  பேருடன் துருக்கியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ஏர் ப்ளூ என்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. கராச்சிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடைபட்ட மர்கலா மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் 45 பேர் உயிருடன் தப்பினர்.  100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சதி்ச்செயல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Mohamed - Singapore,இந்தியா
2010-07-28 14:09:33 IST
விமான விபத்து தொடர்ச்சி........மனதை கவலை அளிக்கிறது........
செந்தில் குமார் - கரூர்,இந்தியா
2010-07-28 13:50:57 IST
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு....மரணம் தனியே வந்தால் அழகு.....மொத்தமாய் மரணம் வருவது அழகில்லையே இறைவா.......
ம. ராஜேஸ்வரி - chennai,இந்தியா
2010-07-28 13:38:45 IST
விமான விபத்து பற்றி தெரிந்து மிகவும் வருந்துகிறேன்.திருவண்ணாமலை மாவட்டம் முத்ரசம்பூண்டியின் எதிர்கால தலைவி என்ற முறையில் என் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.....
v.sathees raj - PERIYAKULAM,இந்தியா
2010-07-28 13:28:15 IST
சிவா - India,இந்தியா
2010-07-28 12:48:18 IST
கருகி உதிர்ந்த உயிர்களிலே கனவுகள் எத்தனை இருந்தனவோ வீட்டையும் உறவையும் பிரிந்து சென்று பொருள் ஈட்டி திரும்பிய வேளையிலே பிரிவு மட்டுமே நிலையாகி விட்ட பொள்ளாத சோகத்தை எப்படி மறந்திட இறiவா! விபத்துக்களை நிறுத்திடு இல்லையேல் விபத்து செய்திகள் எம்மை அணுகிடாமல் செய்திடு இறப்பிலும் இனியதை தந்திடு இறைவா! இருப்போருக்கும் இறந்தோருக்கும் அமைதியை தந்தருள்வாய்!...
S.thiyagu - singapore,இந்தியா
2010-07-28 12:42:30 IST
இந்த வருடம் விமானத்தில் எமன் பயணம் செய்வான் போல இருக்குறது . ஆகையால் விமானம் ஏறும் பொது அவர் அவர் குல சாமியிடம் வனங்கி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவும் .எம் மதமும் சம்மதம் all god same pray first...
naga - chennai,இந்தியா
விபத்தில் இறந்த அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம். மேலும், இது போன்ற அசம்பாவிதம் நடை பெறாமல் இருக்க சிறந்த தொழில் நுட்பம் உருவாக்கப் பட வேண்டும்....
mohanraj - chennai,இந்தியா
இறந்தவர்களின் குடும்பதிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் .அவர்களின் ஆன்மா சாந்தியடைய இந்திய மக்களின் சார்பாக எனது அஞ்சலி .....
பாலசுப்ரமணியன் ராமசாமி - KulamangalamPudukkottai,இந்தியா
2010-07-28 11:56:22 IST
என்னதான் நாம் அறிவியலில் முன்னேறினாலும் நம்மால் சுனாமி, நிலநடுக்கம், பனிமூட்டம் , கடும்புயல் மழையின்மை போன்ற இயற்கை பேரழிவுகளைத் தடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம்.... கடவுளே.. இவர்கள் ஆத்மாக்களை சாந்தியடைய செய்யுங்கள்.......

கருத்துகள் இல்லை: