புதன், 28 ஜூலை, 2010

கம்போடிய கொடியவன் Pol Pot ின் கூட்டாளிக்கு 30 ஆண்டுகால சிறை

சுமார் இருபது லட்சம் மக்களை அதுவும் தன சொந்த மக்களையே கொன்ற மாபெரும் தலைவன்தான் கம்போடியாவின் போல்போட்.

இன்னும் சரியாக கணக்கு எடுக்க முடியாத அளவு கொலைகளை புரிந்த போல்போட்டின் மரணம் இன்னும் பலரால் நம்ப முடியாத சம்பவமாக உள்ளது. அந்த அளவு ஒரு கொடுமைக்காரனாக  சாதாரணமாக யாராலும் நம்ப முடியாத சக்தி உள்ள மனிதனாக அவரை அவரது கெமர் ரூஸ் பட்டாளம் உருவாக்கி வைத்தது. அவரது ஆதரவாளர்கள் அவரை கடவுளுக்கு நிகராக எண்ணினார். ஆரம்பத்தில் அவரை வரவேற்ற மக்களை கொன்று கோவித்ததுதான் அவர் செய்த முதற் காரியம். படித்தவர்கள்தான் அவரது முதல் இலக்கு. வாசிக்க தெரிந்த எல்லோரும் தேடி தேடி கொல்லப்பட்டார்கள். நூற்றுக்க் நூறு தனது விசுவாசிகள் தவிர வேறு யாரும் கம்போடியாவில் உயிரோடு இருக்ககூடாது என்ற கொள்கையை ஈவு இரக்கம் இல்லாமல் அமுல் படுத்தினார்.
இறுதியில் அவரது படையினர் குறிக்கோள் இல்லாமல் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் துரோஹி என்று சுட்டுக்கொல்ல அரம்பத்தினர்.ஒவ்வொரு படையணிகளும் சட படையணிகளை சந்தேகத்தோடு பார்க்கத்தொடங்கின, விளைவு எங்கும் கொலை பிணக்காடு. யாருக்கு எதிராக இதனை போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன என்று யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. கம்போடிய மக்களும் முழு உலகமும் போல்போட்டின் பயங்கர வாதம் அடியோடு அழியவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
பல ஆண்டுகளுக்கு பின்பு போல்போடின் உரற்ற உடல் ஒரு கொட்டிலில் கண்டுபிடிக்க பட்டது. அவரை யாரும் வெள்ளைகொடியோடு வா என்று அழைக்க வில்லை.

கம்போடியா இனப் பேரழிவு: கெமர் ருஜ் தலைவருக்கு 30 ஆண்டு சிறை.


கம்போடியாவில் 1970களில் அப்போதைய கெமர் ருஜ் ஆட்சியில் இனப் பேரழிவு குற்றங்களுக்காக டுச் என்பவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெமர் ருஜ் ஆட்சியில் கம்போடியாவில் பட்டினியாலும், அதிகாமான வேலைப் பளுவாலும், மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தாலும் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்கள் மரணமடைந்தனர்.

கம்போடியாவின் கெமர் ருஜ் ஆட்சியில் நிகழ்ந்த இனப் பேரழிவுக்காக இது வரை இவர் மட்டுமே தண்டிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 15,000 ஆடவர், மாதர் மற்றும் குழுந்தை கள் கொலை செய்யப்பட்டதை S-21 என்ற சிறையில் மேற் பார்வையிட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் தம் மீது சுமத்தப் பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
ஆனால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் தம்மை விடுவிக்குமாறு கோரினார். இவருடைய சிறைக்கு அனுப்பப்படும் அனைவரும் கொல்லப்படு வதற்காகவே அனுப்பப்பட்டனர் என்று ஐநா தலைமையிலான நீதிமன்றம் கூறியது.

Pol Pot, (Khmer: ប៉ុល ពត), was the leader of the Cambodian communist movement known as the Khmer Rouge[7] and was Prime Minister of Democratic Kampuchea from 1976–1979. His time as the leader of Cambodia, in which he attempted to "cleanse" the country, resulted in the deaths of an estimated 1.7 to 2.5 million people.

கருத்துகள் இல்லை: