பொது மக்களின் கட்டிடங்களிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர் - இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு
வடக்கில் புதிய நிரந்தர இராணுவ முகாம்களை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதனால் தனியார் கட்டிடங்களில் நிலை கொண்டுள்ள படையினர் அக் கட்டிடங்களி லிருந்து வெளியேறும் செயற்பாடுகளும் துரித மடைந்துள்ளன என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்தார். புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவ முகாமை இராணுவத்தினரிடம் கையளித்து அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, நாட்டின் எதிர்கால சவால்களை கவனத்தில் கொண்டே பாதுகாப்பு,உட் கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்படுகின்றன. அதேபோல வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முன் னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி களும் பாதுகாப்பை கவனத்திற் கொண் டே முன்னெடுக்கப்படுகின்றன.
படையினர்,வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணி வெடி அகற்றல், பாலங்கள் நிர் மாணித்தல், நிர்மாணப் பணிகளில் ஈடுபடல் மட்டுமன்றி மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அவர்களின் செயற்பாடுகளை கண் காணிக்கின்றபோது மிகக்கூடி விரை வில் பொதுமக்களை குடியமர்த்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
68ஆவது படைப்பிரிவிற்கான புதிய கட்டிடம் சகல வசதி வாய்ப்புக் களுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.படையினருக்கான கட்டிடங் களை படையினர் பயன்படுத்துகின்றபோது பொதுமக்களின் கட்டிடங் களில் நிலைகொண்டுள்ள படையினர் வெகுவிரை வில் அங்கிருந்து வெளியேற்றப்படுவதுடன் பொது மக்கள் அந்த கட்டிடங்களை பயன் படுத்தக்கூடியதாக இருக்கும்.
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இக் கட்டிடம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்த பாய ராஜபக்இவின் நீண்ட கால பாது காப்புத் திட்டங்கள் மற்றும் நுணுக் கங்களுக்கு அமைவாகவே தொழில் நுட்பரீதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும். தனியார் கட்டிடங்களிலிருந்து படையினரை அப்புறப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக் கின்றது. படையினருக்கு புதிய கட்டி டங்களை நிர்மாணிக்கும் பணிகளை விடவும் தனியார் கட்டிடங்களிலிருந்து படையினர் வெளியேறும் செயற் பாடுகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.
படையினர் தனியார் கட்டிடங் களில் இருந்து அகன்று முகாம் களுக்கு செல்வதனால் தனியார் சமூகத்தினர் அக்கட்டிடங்களை பயன் படுத்தமுடியும் என்பதுடன் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.எதிர்காலத்தில் படை அதிகாரிகள் மற்றும் குடும்பங்களுக்காக தனியான கட்டிடங்கள் நிர்மாணிக்கப் படும்.திருமணமான படையதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தின ருடன் அங்கு தங்கியிருந்து பணியாற்ற முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக