ஞாயிறு, 25 ஜூலை, 2010

அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சியை

அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சியை கோரியுள்ளதாக லக்பிம பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ள குறித்த நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனப்டி எதிர்காலத்தில் குறித்த நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் இலங்கையில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக விஜயம் செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு செல்ல அஞ்சியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி பாராட்டும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை: