வியாழன், 27 டிசம்பர், 2018

ஆசிரியர் போராட்டம் .. ஸ்டாலின் நேரில் ஆதரவு ..

minnambalm : "2009 மற்றும் டெட் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புப்
போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த ஆசிரியர்கள், டி.பி.ஐ. வளாகத்தில் மூன்றாவது நாளாக முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்களைச் சந்திக்க இன்று மதியம் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் டிபி.ஐ. வளாகத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் பார்த்துப் பேசினார். தினகரன் அங்கே இருந்து திரும்பும் அதே நேரம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளே வந்தார்.

இருவரும் எதிர் எதிரே சந்தித்துக் கொண்டார்கள். ஸ்டாலினைப் பார்த்ததும் தினகரன் வணக்கம் சொல்ல... பதிலுக்கு ஸ்டாலினும் வணக்கம் சொன்னார். ‘என்ன பார்த்துப் பேசிட்டீங்களா?’ என ஸ்டாலின் தினகரனைப் பார்த்து கேட்க, ‘பேசிட்டேன்.. நீங்க பார்த்துட்டு வாங்க...’ என தினகரன் சொல்ல... ‘சரி பார்த்துட்டு வரேன்... நீங்க கிளம்பிட்டீங்களா?’ என்று ஸ்டாலின் கேட்டிருக்கிறார். ‘ஆமா பார்த்துட்டேன். கிளம்பிட்டேன்’ என தினகரன் சிரித்தபடியே சொல்ல... தலையசைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஸ்டாலின். அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

‘போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை சந்திக்க தினகரன் போகிறார் என்ற தகவல் காலையில் இருந்தே வாட்ஸ் அப்பில் பரவியது. அவர் மதியம் அங்கே போவது ஸ்டாலினுக்கும் தெரியும். அப்படி இருந்தும், வேண்டும் என்றேதான் தினகரன் அங்கே இருக்கும்போதே அவரும் வந்தார் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், திமுக தரப்பிலோ, ‘தலைவர் அறிவாலயத்தில் இருந்து திடீர்னுதான் கிளம்பினாரு. அங்கே யாரு இருக்காங்க என்ன என்ற எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. டி.பி.ஐ..வளாகத்தில் போய் கார் நிறுத்தும் போதுதான் தினகரன் கட்சி கார்கள் நிறைய இருந்துச்சு. அப்போதான் தினகரன் வந்திருக்காருன்னு சொன்னாங்க. இந்தத் தகவலை தலைவருக்கும் சொன்னோம். ‘அவரு இருந்தால் நாம பார்க்க கூடாதா என்ன... வாங்க பார்ப்போம்னு சொல்லிட்டுதான் அவரு சாதாரணமாக வந்தாரு. இதுல திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை’ என்று சொல்கிறார்கள். ”என்று முடிந்தது அந்த மெசேஜ்.


கருத்துகள் இல்லை: