தினத்தந்தி :சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்
ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி
தெரிவித்துள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக் குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார். இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட
ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது போதுமானதல்ல. உடனடியாக அவர்கள் மீது
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 26, 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக