மின்னம்பலம்: தமிழ்த்
திரையுலகில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம், தமிழக அரசு நடத்திய முத்தரப்பு
பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்ததால் மே மாதம் மட்டும் 20 படங்கள்
ரிலீஸ் ஆனது
1. சில சமயங்களில், 2. அலைபேசி, 3. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, 4. காத்திருப்போர் பட்டியல், 5. இரவுக்கு ஆயிரம் கண்கள், 6. இரும்புத்திரை, 7. நடிகையர் திலகம், 8. 6 முதல் 6, 9. பாஸ்கர் ஒரு ராஸ்கல், 10. காளி, 11. காதலர்கள் வாலிபர் சங்கம், 12. 18.05.2009, 13. செயல், 14. பால்காரி, 15.அபியும் அனுவும், 16. ஒரு குப்பைக் கதை, 17. பேய் இருக்கா இல்லையா, 18. புதிய புரூஸ்லி, 19. செம, 20. காலக் கூத்து.
மேற்குறிப்பிட்ட படங்களில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் தயாரிக்கப்பட்ட படம். இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படம் திரையிட்ட அனைத்துத் திரைகளிலும் வசூலைக் குவித்தது. தமிழகத் திரையரங்குகள் மூலம் இந்தப் படத்தின் விநியோகஸ்தருக்குக் கிடைத்த வருவாய் 7.60 கோடி ரூபாய். இது படத்தின் பட்ஜெட்டை போன்று மும்மடங்கு.
விஷால் நடித்த படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்த சூழலில் அவருக்குத் திருப்புமுனையாக வசூல் ரீதியாக வெற்றியைத் தந்த படம் இரும்புத் திரை. தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் சுமார் 16 கோடியை வருவாயாகப் பெற்றது.
படைப்பு ரீதியாகப் பத்திரிகை, வெகுஜன தளத்தில் பாராட்டைப் பெற்ற நடிகையர் திலகம் நகர்புறங்களில் சுமாராக ஓடியது. புற நகர் பகுதிகளில் இந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதே போன்று ஒரு குப்பைக் கதை படம் வேகமெடுக்கத் தொடங்கிய நிலையில் ஜூன் முதல் வாரம் வந்த படங்களுக்காக தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது.
இரவுக்கு ஆயிரம் கண்கள், காளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவிய படங்கள். எஞ்சிய படங்கள் அனைத்தும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரிலீஸான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவிய படங்களாகும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக