திங்கள், 24 டிசம்பர், 2018

மூன்றாவது அணி அமைக்கும் தெலுங்கு தேசம்? .. சந்திரசேகர ராவ் நவீன் பட்நாயக் பேச்சுவார்த்தை

NDTV : இந்த வாரம் முழுவதும், பல்வேறு மாநில முதல்வர்களை சந்திப்பதற்கு
தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் திட்டமிட்டுள்ளார். மம்தாவை இன்று சந்தித்து பேசுகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. <எம்.பி. தேர்தலில் 3-வது அணியை அமைக்கும் சந்திர சேகர ராவ் - ஒடிசா முதல்வருடன் சந்திப்பு" சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவுக்கு ஒடிசா முதல்வர் வாழ்த்து கூறியுள்ளார்.
Hyderabad: நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ள சந்திர சேகர ராவ் முதல் கட்டமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவு எதிர் எதிர் துருவங்களாக உள்ளனர். இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக மாநில கட்சிகளை ஒன்றிணைத்து 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

தனது 7 நாட்கள் பயணத்தின் முதல்நாளான நேற்று அவர் ஆந்திராவில் உள்ள ராஜஷியாமளா கோவிலுக்கு சென்று சுவாமி ஸ்வரூபானந்தேந்திராவை தரிசனம் செய்தார். இதன்பின்னர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்திற்கு சென்ற சந்திரசேகர ராவ் அங்கு முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கியமாக பேசப்பட்டது.


ஒடிசாவை கடந்த 20 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. இதன் முதல்வராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். அவருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நவீன் பட்நாயக் தேசிய விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: