nakkheeran.in - ஜெ.டி.ஆர்:
திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 23
இன்று பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு
மாநாட்டு நடைபெற்றது.
இந்த பேரணி மற்றும் மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்துள்ளது. தமிழ்நாடு முழுதும் உள்ள பெரியார் கொள்கைகளை ஏற்கும் அனைத்து அமைப்புகளும், படைப்பாளிகளும், செயல்பாட்டாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் கருப்பு சட்டை அணிந்து இந்த பேரணியில் பங்கேற்றார்கள்.
பொதுமக்களும், பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் திரண்டு இப்பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பேரணி மற்றும் மாநாட்டிற்கு ஆரம்பத்தில் அனுமதி கொடுத்திருந்தாலும் இங்கே நடத்த கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மாநகர காவல்துறையின் சார்பில் மாநாடு, பொதுகூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர்நீதிமன்ற அனுமதியுடன் பேரணியும், மாநாடும் திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஆசிரியர் வீரமணி, வே.ஆனைமுத்து, கொளத்தூர்மணி, கு.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், , தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் உமாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் வாலாசா வல்லவன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்வழி கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்ப தமிழர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் , உள்ளிட்ட 200 தேர்தல் அரசியல் சாராத இயக்கங்களின் ஒருங்கிணைப்பு மாநாடு என்கிறர்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.
இன்று மதியம் பேரணி ஆரம்பித்து திருச்சி மாநகரின் முக்கியவீதிகளில் வந்து மாலை பொது கூட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக