NDTV :
சுனாமி
நினைவு நாள் இன்று
அனுசரிக்கப்படும் நிலையில்,
சென்னையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காசிமேடு கடலுக்கு படகில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், நடுக்கடலில் பால் ஊற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க எந்த கால அளவும் இல்லை.
மறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை, ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா தான் செய்த தவறை உணர்ந்ததால் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சசிகலா குடும்பத்தவர் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் அதைத் தாண்டி எதையும் சொல்ல முடியாது எனவும் கூறினார்.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கம், கட்சியில் மற்றவர்களுக்கும் இது ஒரு முன்உதாரணம். தம்பி என்றும் பாராமல் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விஷயம். கட்சி விரோத நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஒருவரை நீக்க முடியும் அது தவிர்க்க முடியாதது.
அவர்
அப்படி நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் ஒரு பாடம் என அமைச்சர் ஜெயக்குமார்
கூறியது குறிப்பிடத்தக்கது
சென்னையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காசிமேடு கடலுக்கு படகில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், நடுக்கடலில் பால் ஊற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க எந்த கால அளவும் இல்லை.
மறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை, ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா தான் செய்த தவறை உணர்ந்ததால் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சசிகலா குடும்பத்தவர் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் அதைத் தாண்டி எதையும் சொல்ல முடியாது எனவும் கூறினார்.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கம், கட்சியில் மற்றவர்களுக்கும் இது ஒரு முன்உதாரணம். தம்பி என்றும் பாராமல் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விஷயம். கட்சி விரோத நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஒருவரை நீக்க முடியும் அது தவிர்க்க முடியாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக