மாலைமலர் :திருப்பூரில் கிளி ஜோசியரை வெட்டிக் கொலை
செய்த நபர், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
TirupurParrotAstrologer சென்னை: திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்தவர் ரமேஷ் என்னும் குமார். நேற்று முன்தினம் இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததார். அப்போது, பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ரமேஷை அரிவாளால் வெட்டினார். கீழே விழுந்த ரமேஷை பலமுறை அரிவாளால் வெட்டிய அந்த மர்மநபர், துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றார். அதில் கிளி ஜோசியர் ரமேஷ், பெண்களை வசியம் செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ரமேஷின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதால் கொலை செய்ததாக அவர் கூறியபடி சென்றார். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிளி ஜோசியரை கொலை செய்தது கும்பகோணத்தைச் சேர்ந்த ரகு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து தப்பி வந்த ரகு, சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். அவரை திருப்பூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக