விகடன் :
பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியபோது கேரளாவைச் சேர்ந்த சிறுமியைக் கூட்டுப் பாலியல் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், 2012-ம் ஆண்டு தனது வீட்டில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார். அதன் பேரில் அவரின் நண்பர்கள் உதவியோடு கேரளாவிலிருந்து 15 வயது சிறுமியை ராஜ்குமாரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இரண்டு நாள்கள் கழித்து அந்தப் பெண் அவரின் அப்பாவுக்கு, `என்னால் இங்கு இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் என்னைத் துன்புறுத்துகிறார்கள். உடனே அழைத்துச்செல்லுங்கள்' என்று போனில் தகவல் சொல்லியிருக்கிறார். அவர்கள் வறுமை கருதி அச்சிறுமியை சமாதானப்படுத்தி தங்க வைத்துள்ளனர். 2012 ஜூன் 27-ம் தேதி ராஜ்குமாரின் நண்பர் சிறுமியின் தந்தையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனே அழைத்துச் செல்லுங்கள். அழுதுகொண்டே இருக்கிறார். சரியாக வேலை செய்வதில்லை என்று புகார் அளித்திருக்கிறார்.
அதற்குச் சந்திரன், 29-ம் தேதி அழைத்துச் செல்வதாகச் சொல்லி போனை வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் ராஜ்குமாரின் நண்பரான ஜெய்சங்கர் சத்யாவின் தந்தை சந்திரனை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, `உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவரைப் பார்த்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக